அறநிலையத்துறை பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆணையரிடம் கோயில் பணியாளர்கள் மனு

அறநிலையத்துறை பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆணையரிடம் கோயில் பணியாளர்கள் மனு
Updated on
1 min read

சென்னை: பணிப் பலன்​கள், கலந்​தாய்வு இடமாறு​தல், பணி நீக்க உத்​தரவை ரத்து செய்​வது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அறநிலையத்துறை ஆணை​யரிடம் கோயில் பணி​யாளர்​கள் மனு அளித்​தனர்.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள இந்து சமய அறநிலை​யத்​ துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில், நிர்​வாக அதி​காரி​கள் சங்​கம் மற்​றும் தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் பல்​வேறு நிர்​வாக ரீதியி​லான ஜீவா​தா​ரக் கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அறநிலை​யத்​துறை ஆணை​யர் டி.ஜி.​வினய்​யிடம் நேற்று மனு அளிக்​கப்​பட்​டது.

அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​வ​தில் உள்ள நடை​முறை இடர்​பாடு​களை ஆணை​யர் மற்​றும் அரசின் கவனத்​துக்​குக் கொண்டு செல்​வதற்​குப் போதிய கால அவகாசம் வழங்க வேண்​டும்.

எந்​தவொரு முன்​வி​சா​ரணை​யும் மேற்​கொள்​ளாமல் ஊழியர்​கள் மீது துறை ரீதி​யான அவசர நடவடிக்​கைகள் எடுக்​கக் கூடாது.

வெளிப்​படைத்​தன்​மை​யுடன் கலந்​தாய்வு முறை​யில் பணி​யிட மாறு​தல்​கள் மற்​றும் பதவி உயர்​வு​களை வழங்க வேண்​டும்.

துறை ரீதி​யாகக் கேட்​கப்​படும் புள்​ளி​விவரங்​களைத் திரட்டி வழங்க அலு​வலர்​களுக்​குப் போதிய கால அவகாசம் அளிக்​கப்பட வேண்​டும். தற்​காலிக பணிநீக்​கத்​தில் வைக்​கப்​பட்​டுள்ள பணி​யாளர்​களின் பணி நீக்க உத்​தரவை உடனடி​யாக ரத்து செய்​து, செயல் அலு​வலர்​களுக்கு மீண்​டும் பணி​யிடம் வழங்​கிட வேண்​டும்.

கோயில் பணித்​தொகு​தியை செயல் அலு​வலர்​கள் கட்​டுப்​படுத்​தும் வகை​யில், உடனடி​யாகச் சட்​டப்​பிரிவு 56-ல் உரிய சட்​டத்​திருத்​தம் மேற்​கொள்ள அரசு ஆவன செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மனு அளிக்​கும் போது, நிர்​வாக அதி​காரி​கள் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் க.ஜெக​நாதன், மாநிலப் பொதுச்​செய​லா​ளர் நா. ரமேஷ், தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநிலப் பொதுச்​செய​லா​ளர் சு.தன​சேகர், தலை​மைச் செய​லா​ளர்​ ​தாம்​பரம்​ ரமேஷ் மற்​றும்​ பல்​வேறு ​மாவட்​டங்​களைச்​ சேர்​ந்​த செயல்​ அலு​வலர்​களும்​, கோயில்​ பணி​யாளர்​களும்​ திரளாக உடனிருந்தனர்.

அறநிலையத்துறை பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆணையரிடம் கோயில் பணியாளர்கள் மனு
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in