

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 12) லேசான மழையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணிவரை தூத்துக்குடி விமான நிலையத்தில் 7 செ.மீ, தூத்துக்குடியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.