நாளை முதல் 2 நாட்களுக்கு வெப்பம் 4 டிகிரி உயர வாய்ப்பு

நாளை முதல் 2 நாட்களுக்கு வெப்பம் 4 டிகிரி உயர வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் 2 நாட்​களுக்கு 4 டிகிரி வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம், புதுவை மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் வறண்ட வானிலை நில​வக்​கூடும். மார்ச் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுவை மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை இயல்பை ஒட்​டியே இருக்​கக்​கூடும். நாளை முதல் அடுத்த 2 நாட்​களுக்கு தமிழகம், புதுவை மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை ஓரிரு இடங்​களில் 2 முதல் 4 டிகிரி செல்​சி​யஸ் வரை அதி​கரிக்​கக் கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 34 டிகிரி செல்​சி​யஸை ஒட்டி இருக்​கக் கூடும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

நாளை முதல் 2 நாட்களுக்கு வெப்பம் 4 டிகிரி உயர வாய்ப்பு
அண்டை மாநிலங்களிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல்: எல்லையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in