ஊட்டியில் ஜீரோ டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அவலாஞ்சியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வெண் நிறமாகக்  காட்சியளித்த புல்வெளி.

அவலாஞ்சியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வெண் நிறமாகக் காட்சியளித்த புல்வெளி.

Updated on
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிக்காலம் என்பதால் நீர் பனி மற்றும் உறைபனி காணப்படும். நீர் பனி தொடங்கிய அடுத்த ஒருசில வாரங்களில் உறை பனி தொடங்கும். கடந்த நவம்பர் மாதமே நீர் பனிதொடங்கிய நிலையில், பல்வேறு புயல்களால் தமிழகம் மற்றும் நீலகிரியில் மழை பாதிப்பு இருந்ததால் உறை பனி தள்ளிப்போனது. அதேபோல் எப்போதும் ஊட்டியில்தான் உறை பனி தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஊட்டியை அடுத்தமஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் கடந்த வாரம் உறை பனிப்பொழிவு தொடங்கியது. இந்நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்ஒருசில இடங்களில் நேற்று முன்தினம் உறை பனிப்பொழிவு தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் கடும் குளிர் நிலவியது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஊட்டி காந்தல் மற்றும் தலைக்குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தயமைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறை பனி நிலவியது.

தலைக்குந்தா பகுதியில் காணப்பட்ட உறை பனியால் பல்வேறு பகுதிகள் காஷ்மீர்போல் காட்சியளித்தன. பச்சை புல் மைதானங்களில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியதுபோல் காணப்பட்ட உறை பனி ரம்மியமாக காட்சியளித்தது. இதற்காக அதிகாலை நேரத்தில் ஆர்வமுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெள்ளைக் கம்பளம் போல் படர்ந்திருந்த உறை பனியை பார்த்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

அதேபோல் கார்கள் மீது விழுந்திருந்த உறை பனி வெள்ளைப் பஞ்சுகள் பதித்ததுபோல் காணப்பட்டது. இருசக்கர வாகன இருக்கைகள் மீதும் உறை பனி காணப்பட்டது. குளிர் பாதிப்பை சமாளிக்க ஒருசிலர் நெருப்பு மூட்டி அதிகாலை நேரத்தில் குளிர் காய்ந்து வருகின்றனர். ஒருசிலர் கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தி சமாளிக்கின்றனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறும்போது, ‘‘ஊட்டி தலைக்குந்தா பகுதியில் உறை பனி பொழிவின் தொடக்கத்திலேயே இந்த முறை வழக்கத்தைவிட மிக அதிகமாகக் காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிகாலை நேரத்தில் வேலைக்குச் செல்லமுடியாமல் கடும் குளிர் இருப்பதால், காலை 10 மணிக்கு மேல் உறை பனியின் தாக்கம் குறைந்தவுடன்தான் பணிகளை தொடர முடிகிறது.

இருந்தாலும் கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். தாமதமாக தொடங்கியதால் இந்த ஆண்டு உறை பனி தாக்கம் அதிகமாக இருக்கும், அடுத்த ஒருசில வாரங்களில் தேயிலைச் செடிகள் கருகிவிடும்’’ என்றனர்.

<div class="paragraphs"><p>அவலாஞ்சியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வெண் நிறமாகக்  காட்சியளித்த புல்வெளி.</p></div>
தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிர் அதிகரிக்க வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in