தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிர் அதிகரிக்க வாய்ப்பு

குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்
தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிர் அதிகரிக்க வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் குளிர் அதி​கரிக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, தென் தமிழகம், டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தின் மற்ற பகு​தி​கள், புதுச்​சேரி​யில் வறண்ட வானிலை நில​வும். தமிழகம், புதுச்​சேரி,காரைக்​காலில் அதி​காலை​யில் பனிமூட்​டம் காணப்​படும்.

டிச.15, 16-ம் தேதி​களில் கடலோர தமிழகத்​தி​லும், 17-ம் தேதி தமிழகத்​தில் பரவலாக​வும், 18, 19-ம் தேதி​களில் தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். கடந்த சில நாட்​களாக தமிழகம் முழு​வதும் குறை​வான வெப்​பநிலை பதி​வாகி வரு​கிறது.

நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் மலைப்​பகு​தியை பொருத்​தவரை ஊட்​டி​யில் 7 டிகிரி, கொடைக்​கானல், குன்​னூரில் 9 டிகிரி, ஏற்​காட்​டில் 10 டிகிரி, சமவெளிப் பகு​தியை பொருத்​தவரை திருத்​தணி​யில் 16 டிகிரி, வேலூர், தரு​மபுரி​யில் 17 டிகிரி, புதுச்​சேரி, சேலத்​தில் 19 டிகிரி, சென்னை நுங்​கம்​பாக்​கம், மீனம்​பாக்​கம், மாமல்​லபுரம், கோவை​யில் 20 டிகிரி குளிர் பதி​வாகி​யுள்​ளது. தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் இன்​றும், நாளை​யும் (டிச.14, 15) குறைந்​த​பட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 3 டிகிரி செல்​சி​யஸ் வரை குறை​வாக இருக்​கக்​கூடும். இதனால், கடும் குளிர் நில​வும்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிர் அதிகரிக்க வாய்ப்பு
எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in