தமிழகத்தில் ஏப்ரல் 12-ம் தேதி வரை வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இன்​று​முதல் ஏப்​.12 வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயர வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சத்​தீஸ்​கர் முதல் மன்​னார் வளை​குடா வரை தெலங்​கா​னா, ராயலசீ​மா, உள் தமிழகம் வழி​யாக சுமார் 900 மீட்​டர் உயரத்​தில், ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும், 10, 11 தேதி​களில் மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும். 12-ம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​களி​லும், 13, 14 தேதி​களில் தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை இன்​று​முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்​யக்​கூடும். அதி​கபட்ச வெப்​பநிலை 99 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 82 டிகிரி ஃபாரன்​ஹீட்டை ஒட்டி இருக்​கக்​கூடும்இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“தேர்தல் ஆணையம் இப்போது பாஜகவின் கிளைக் கழகம்!” - தி.மலையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in