

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகக் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும்.
மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகளிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
சிம்மம்: முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர். பழைய கடன், பகையை நினைத்து கவலைப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுப்புகள் கூடும்.
கன்னி: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். சக ஊழியர்கள் மதிப்பர்.
துலாம்: நண்பர்கள் உதவுவர். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பூர்வீக நிலம், வீடு, மனை தொடர்பான பிரச்சினைகளில் நல்ல தீர்வு காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
தனுசு: எதிர்பாராத வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வசதி நிறைந்த வீட்டுக்கு குடி போவீர். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மகரம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். வாகனத்தில் அதிக கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினருடன் இணக்கமாக இருக்கவும். தொழிலில் நிதானம் தேவை. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கும்பம்: பணவரவு மனநிறைவைத் தரும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு.
மீனம்: நீண்டநாளாக பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.