பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated on
1 min read

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜன.5) திறக்கப்படும் நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 10-வது நாளாக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்னை சிவானாந்தா சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரைபோராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். பள்ளிகள் இன்று திறந்தாலும் பின்வாங்கும் எண்ணமில்லை. மாறாக மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று முதல் போராட்டங்களை நடத்த இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்துக்கு வருவார்கள். எனவே,தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஓய்வூதியத்தில் முரண்பாடு: முதல்வர் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை நன்றியுடன் வரவேற்கிறோம். ஆனால், எங்களுக்கு அடிப்படைஊதியத்திலேயே முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியத்தில் முரண்பாடு இருக்கும். எனவே அடிப்படை ஊதியத்தை முறையாக உயர்த்த வேண்டும்’’ என்றார்.

திருமாவளவன் வலியுறுத்தல்: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக்களைந்து, நிலுவைத் தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், தூய்மைப் பணியாளர்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு பணியிலேயே நீடிக்கச் செய்ய வேண்டும்.

பெரியாரின் அரசியல் என்பதுதன்னலமற்ற அரசியல். பெரியாரை வீழ்த்த நினைக்கும் சக்திகளின் நோக்கம் நிறைவேற சீமானின் அரசியல் ஏதுவாக அமைந்து விடக்கூடாது. விசிகபேசுவது பெரியாரின் அரசியலைத்தான், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்கான அடித்தளம் பெரியாரிய அரசியலே’’ என்று கூறினார்.

<div class="paragraphs"><p>சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p></div>
தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரூ.3,000 - இன்று முதல் டோக்கன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in