மக்காச்சோளம் மீதான வரியை நீக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

துரை வைகோ | கோப்புப் படம்

துரை வைகோ | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மக்​காச்​சோளத்​துக்கு குறைந்​த​பட்ச உத்​தர​வாத விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: நெல்​லை, தென்​காசி, விருதுநகர், தூத்​துக்​குடி, அரியலூர், பெரம்​பலூர், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பெரு​மளவு மக்​காச்​சோள சாகுபடி நடை​பெறுகிறது. மக்​காச்​சோளத்​துக்கு விதிக்​கப்​பட்​டிருந்த ஒரு சதவீத செஸ் வரி​யை நீக்க வேண்​டும்.

சந்​தை​யில் விலை வீழ்ச்சி அடைந்​துள்​ள​தால் விவ​சாயிகள் கடும் நஷ்டத்தை சந்​திக்​கின்​றனர். உற்​பத்தி செலவு குவிண்​டாலுக்கு ரூ.2,000–2,200 என இருக்​கும் நிலை​யில், தற்​போது விலை ரூ.1,700–1,800-க்கு வீழ்ந்​துள்​ளது. இந்த இழப்பை ஈடு​செய்ய, தமிழக அரசு ஒரு குவிண்​டாலுக்கு குறைந்​த​பட்​சம் ரூ.250 மானி​யம் வழங்​கி​னால், நஷ்டத்​தில் அரசு பங்​கேற்​ப​தாக அமை​யும்.

அண்டை மாநில​மான கர்​நாட​கா​வில், சந்தை தலை​யீட்​டுத் திட்​டம் மூலம் குவிண்​டாலுக்கு ரூ.2,150 வரை விலை உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. சந்தை விலை ரூ.1,900-க்கு கீழே சென்​றால், அதி​கபட்​சம் 50 குவிண்​டால் வரை ரூ.250 இழப்​பீடு வழங்​கப்​படு​கிறது. அதே​போல, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கேரளா போன்ற மாநிலங்​களும் பல்​வேறு வழிகளில் மக்​காச்​சோள விவ​சா​யத்தை ஊக்​கு​வித்​து, விவ​சா​யிகளைப் பாது​காத்து வரு​கின்​றன.

எனவே, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கருணை உள்​ளத்​துடன் இந்த விஷ​யத்​தைப் பரிசீலித்​து, மக்​காச்​சோளத்​துக்கு உரிய மானி​யம் வழங்​குவதுடன், விவ​சா​யிகளைப் பாது​காக்க நடவடிக்கை வேண்​டும். இவ்​வாறு துரை வைகோ வலி​யுறுத்​தியுள்​ளார்​.

<div class="paragraphs"><p>துரை வைகோ | கோப்புப் படம்</p></div>
பிப்​.17-ல் இடைக்கால பட்ஜெட்: பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in