40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 26-ல் வேலைநிறுத்​தம்

40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 26-ல் வேலைநிறுத்​தம்

ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தவும் கோரிக்கை
Published on

சென்னை: தமிழகத்​தில் டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் பிப்​.26-ம் தேதி வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக அறி​வித்​துள்​ளனர்.

இது குறித்து டாஸ்​மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: டாஸ்​மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு​வின் ஆலோ​சனைக் கூட்​டம் கடந்த 30-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில், டாஸ்​மாக் மது​பான சில்​லரை விற்பனைக் கடைகளில் 22 ஆண்​டு​களாக பணிபுரிந்து வரும் ஊழியர்​களை தமிழ்​நாடு தொழில் நிறு​வனங்​கள் (தொழிலா​ளர்​களுக்கு நிரந்தர தகுதி வழங்​குதல்) சட்ட அமலாக்க அலு​வலர் பிறப்​பித்த உத்​தர​வின்​படி, ஒரே தன்​மை​யுடைய பணி​ களை செய்து வரும் அனைத்து டாஸ்​மாக் கடை ஊழியர்​களை​யும் பணி வரன்​முறைப்​படுத்த வேண்​டும்.

டாஸ்​மாக் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்​கப்​படும் அடிப்​படைச் சம்​பளம், பஞ்​சப்​படி, வீட்டு வாடகைப்​படி, நகர ஈட்​டுப்​படி, மலைப்பிரதேசப்​ படி வழங்​கு​வதைப் போல டாஸ்​மாக் ஊழியர்​களுக்​கும் வழங்க வேண்​டும். காலி மது​பாட்​டிலை திரும்பப் பெறும் திட்​டம் என்ற பெயரில் ஊழியர்​களுக்கு வேலைப்​பளு திணிப்​பதை கைவிட்டு தனி முகமை மூலம் அமல்​படுத்த வேண்​டும். டாஸ்​மாக் நிர்​வாகத்​தின் மருத்​துவ திட்​டத்​துக்கு மாற்​றாக இஎஸ்ஐ திட்​டம் அமல்​படுத்த வேண்​டும்.

டாஸ்​மாக் கடை ஊழியர்​களின் ஓய்வு வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட 40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் பிப்​.26-ம் தேதி வேலைநிறுத்​தப் போ​ராட்​டத்​தில் ஈடுபட தீர்​மானிக்​கப்​பட்டது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 26-ல் வேலைநிறுத்​தம்
சட்டப்பேரவை தேர்தலில் காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும் 39 தொகு​தி​களின் பட்​டியல் தயார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in