போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு டாஸ்மாக் நோட்டீஸ்

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு டாஸ்மாக் நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட பணி​யாளர்​களுக்கு நோட்​டீஸ் வழங்​கி​யும், பணி​யிட​மாற்​றம் செய்​தும் டாஸ்​மாக் நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது.

டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் இருந்து வரு​கின்​றன.

இது தொடர்பான புகார்​களின் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடந்த புதன் மற்​றும் வியாழக்​கிழமை​களில் 217 பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். இந்த நடவடிக்​கைக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, பல்​வேறு பகு​தி​களில் டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கடை யடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனிடையே போராட்​டத்​தில் ஈடு​பட்ட பணி​யாளர்​களின் விவரங்​கள் சேகரிக்​கப்​பட்டு வரு​வ​தாக​வும், அவர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என டாஸ்​மாக் நிர்​வாகம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்ட நிலை​யில், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​களிடம் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

மேலும் திருப்​பூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் பணி​யாளர்​களை வேறு கடைகளுக்கு பணி​யிட​மாற்​றம்​ செய்​து நடவடிக்​கை மேற்​கொண்​டுள்​ளனர்​.

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு டாஸ்மாக் நோட்டீஸ்
பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்: சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in