2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை: பொங்கலன்று மட்டும் ரூ.251 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்

2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை: பொங்கலன்று மட்டும் ரூ.251 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்
Updated on
1 min read

சென்னை: பொங்​கல் தினத்​தில் ரூ.251 கோடி உட்பட தமிழகம் முழு​வதும் 2 நாட்​களில் ரூ.518 கோடிக்கு மதுவிற்​பனை நடை​பெற்​றுள்​ளது.

தமிழகத்​தில் மொத்​தம் 4,829 டாஸ்​மாக் மதுக்கடைகள் செயல்​படு​கின்​றன. இதில் 2,919 கடைகளில் மது அருந்​தும் பார்​கள் உள்​ளன. டாஸ்​மாக் மதுக்​கடைகளை பொறுத்​தவரை தின​மும் சராசரி​யாக ரூ.150 கோடி அளவுக்கு மது​விற்​பனை நடை​பெறும். சனி, ஞாயிறு உள்​ளிட்ட வார இறுதி நாட்​களில் ரூ.200 கோடிக்​கும், மற்ற பண்​டிகை காலங்​களில் ரூ.250 கோடிக்​கும் மது விற்​பனை நடை​பெறும்.

அதே​போல டிச.31 மற்​றும் ஜன. 1 ஆகிய தேதி​களில் 2 நாட்​கள் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்​பனை இருப்​பது வழக்​கம். அதே​போல் தீபாவளி பண்​டிகை​யின் போதும், பொங்​கல் பண்​டிகை​யின் போதும் மது​விற்​பனை மிக அதி​க​மாக இருக்​கும். பொங்​கல் பண்​டிகை 4 நாட்​கள் கொண்​டாடப்​படும் நிலை​யில்இந்தாண்டு தொடர்ந்து 5 நாட்​கள் விடு​முறையாகும்.

கடந்த ஆண்டு பொங்​கல் பண்​டிகை​யின்​போது ஜன.13, 14, 16 ஆகிய 3 நாட்​களில் ரூ.725 கோடிக்கு மது விற்​றது. இந்​தாண்டு 14, 15 தேதி​களில் டாஸ்​மாக் கடைகளில் ரூ.435 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​றது. கடந்த 13-ம் தேதி ரூ.184 கோடிக்​கும், பொங்​கல் நாளில் மட்டும் ரூ.251 கோடிக்​கு விற் றது.

மேலும் சென்னை மண்​டலத்​தில் ரூ.56 கோடி, திருச்சி-ரூ.49.81 கோடி, மதுரை- ரூ.54 கோடி, சேலம்- ரூ.46 கோடி, கோவை- ரூ.44.80 கோடி அளவுக்கு மது​விற்​பனை நடை​பெற்​றுள்​ளது.

திரு​வள்​ளுவர் தினத்தன்று கடைகள் மூடப்​படும் என்பதால் பெரும்​பாலானோர் பொங்​கல் அன்றே மது வாங்கி வைத்​தால் விற்​பனைசற்று அதி​கரித்​துள்​ளது. மேலும் டாஸ்​மாக் கடைகளை தவிர தனி​யார் விடு​தி​கள், மனமகிழ் மன்​றங்​களில் 2 நாட்​களில் ரூ.82.5 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​றுள்​ளது. தமிழகம் முழு​வதும் மொத்​த​மாக கடந்த 14,15 ஆகிய நாட்​களில்​ ரூ.517.85 கோடிக்​கு மது விற்பனை நடை​பெற்​றுள்​ளது.

2 நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை: பொங்கலன்று மட்டும் ரூ.251 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்
மது விற்பனைதான் திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன், அன்புமணி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in