சென்னை | பிரேக் செயலிழந்த டேங்கர் லாரி அரசு பேருந்து மீது மோதி விபத்து

சென்னை | பிரேக் செயலிழந்த டேங்கர் லாரி அரசு பேருந்து மீது மோதி விபத்து
Updated on
1 min read

சென்னை: கிண்டி - அசோக் நகர் 100 அடி சாலை​யில் பிரேக் செயலிழந்த பெட்​ரோல் டேங்​கர் லாரி, அரசு பேருந்​தின் பின்​புறம் மோதி விபத்​துக்​குள்​ளான​தால் அப்​பகு​தி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

பெட்​ரோல் டேங்​கர் லாரி ஒன்று நேற்று காலை கிண்​டியி​லிருந்து அசோக் நகர் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. காசி திரையரங்​கம் அரு​கே​யுள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது, திடீரென லாரி​யின் பிரேக் செயலிழந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால் கட்​டுப்​பாட்டை இழந்த லாரி, கிளாம்​பாக்​கத்​தில் இருந்து கோயம்​பேடு நோக்கி பயணி​களு​டன் சென்று கொண்​டிருந்த மாநகர அரசுப் பேருந்​தின் பின்​புறத்​தில் பயங்​கர​மாக மோதி​யது.

இந்த விபத்​தில் பேருந்​தின் பின்​பகுதி மற்​றும் டேங்​கர் லாரி​யின் முன்​பகுதி பலத்த சேதமடைந்​தன. பேருந்​தில் இருந்த பயணி​கள் அதிர்ச்சி அடைந்து அலறி கூச்​சலிட்​டனர். அதிர்​ஷ்ட​வச​மாக பேருந்​தில் பயணித்​தவர்​களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்​பட​வில்​லை.

லாரி ஓட்​டுநர் சுரேஷ் காயமடைந்து சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார். விபத்​துக்​குப் பிறகு லாரி​யின் ஸ்டியரிங் லாக் ஆனதால், வாக​னத்தை உடனடி​யாக நகர்த்த முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

இதனால் மேம்​பாலத்​தில் வாக​னங்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தன. தகவல் அறிந்த அடை​யாறு போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் மற்​றும் மீட்​புப் பணி​யாளர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று கிரேன் உதவி​யுடன் சேதமடைந்த லாரி மற்​றும் பேருந்தை அப்​புறப்​படுத்​தினர்.

இந்த விபத்​தால் சென்னை விமான நிலை​யம், கிண்​டி, ஈக்​காட்​டுத்​தாங்​கல், அசோக் நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் இரு​புற​மும் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

அலு​வலக நேரத்​தில் ஏற்​பட்ட இந்த விபத்​தால் வாகன ஓட்​டிகள் மற்​றும் பொது​மக்​கள் பெரும் அவதிக்​குள்​ளாகினர். சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

சென்னை | பிரேக் செயலிழந்த டேங்கர் லாரி அரசு பேருந்து மீது மோதி விபத்து
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விஜய் ஆட்சியை பாராட்டியதற்கு எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in