துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை: பொதுமக்களை வெகுவாக கவர்ந்த அரசியல் நாகரீகம்

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில், வாக்களித்து விட்டு வந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில், வாக்களித்து விட்டு வந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.

Updated on
1 min read

சென்னை: சென்னை ஆழ்​வார்​பேட்டை வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்​டி, தமிழகம் முழு​வதும் வாக்​குப்​ப​திவு விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. ஆழ்​வார்ப்​பேட்​டை, எஸ்​ஐஇடி கல்​லூரி​யில், தமிழக முதல்​வர் ஸ்​டா​லின், மனைவி துர்கா ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநி​தி, அவருடைய மனைவி கிருத்​தி​கா, மகன் இன்​பநிதி ஆகியோர் வருகை தந்​தனர். வரிசை​யில் நின்று அவர்​கள் அனை​வரும் தங்​களது வாக்​கினை பதிவு செய்​தனர்.

அதன் பின்​னர், வெளியே வந்த தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் துர்கா ஸ்டா​லினை பாஜக வேட்​பாள​ரும், தெலுங்​கானா ஆளுநர​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் நேருக்குநேர் சந்​தித்​தார். அப்​போது, தமிழிசை சவுந்​தர​ராஜன், “அண்​ணன் வணக்​கம்” என்​றார். இதையடுத்​து, “நல​மாக இருக்​கிறீங்​களா” என்று முதல்​வர் நலம் விசா​ரித்​தார். தொடர்ந்​து, ‘‘வாழ்த்​துக்​கள்” என முதல்​வர் தெரி​வித்​தார். தொடர்ந்​து, துர்கா ஸ்டா​லினிடம் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.

தேர்​தல் களம் மற்​றும் அரசி​யல் போட்​டிகளைத் தாண்​டி, மிகுந்த மரி​யாதை​யுடன் முதல்​வர் ஸ்டா​லினிடம், அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசா​ரித்த, அரசி​யல் நாகரி​கம் அங்​கிருந்​தவர்​கள​யும், பொது​மக்​களை​யும் வெகுவாக கவர்ந்தது.

<div class="paragraphs"><p>சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில், வாக்களித்து விட்டு வந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.</p></div>
சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் மோதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in