வேதங்களைப் போல பக்தியுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தல்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ‘நேச்சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ தொடக்க விழாவில் இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டார். உடன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.மணவாளன், உலக சைவ உணவுக் கழக தலைவர் மஹாவீர் போத்ரா, செயலாளர் சுதாகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ‘நேச்சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ தொடக்க விழாவில் இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டார். உடன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.மணவாளன், உலக சைவ உணவுக் கழக தலைவர் மஹாவீர் போத்ரா, செயலாளர் சுதாகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 
1 min read

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து சம்​பிர​தா​யத்​துக்​காக பாடப்​படும் சடங்கு அல்ல, வேதங்​களைப் பாடு​வது போல் பக்​தி​யுடன் அதனை பாட வேண்​டும் என ‘நேச்​சர் கியூர் ஃபெஸ்ட்’ விழா​வில் நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் வலி​யுறுத்​தி​னார்.

உலக சைவ உணவுக் கழகம், அரசு யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மாணவர் மன்​றம், ரோட்​டரி சங்​கம் சார்​பில் காந்தி ஜெயந்​தியை முன்​னிட்​டு, மக்​களிடையே யோகா, இயற்கை மருத்​து​வம், ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறை குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் ‘நேச்​சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ திரு​விழா சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இயற்கை மற்​றும் நல்​வாழ்​வுக்​கான விழிப்​புணர்​வுப் பேரணி​யுடன் தொடங்​கிய விழா​வில், பொது​மக்​களுக்கு இலவச யோகா, இயற்கை மருத்​துவ ஆலோ​சனை முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.

விழா​வின் சிறப்​பம்​ச​மாக அமைக்​கப்​பட்​டிருந்த இயற்கை உணவு கண்​காட்​சி​யில், 1,000-க்​ கும் மேற்​பட்ட சமையல் எரி​வா​யு, எண்​ணெய் இல்​லாத பாரம்​பரிய இயற்கை உணவு வகைகள் காட்​சிப்​படுத்​தப்​பட்டு நோவா உலக சாதனை அங்​கீ​காரம் பெறப்​பட்​டது.

தொடர்ந்​து, ‘சைவ உணவைத் தேர்ந்​தெடுப்​போம், யோகா செய்​வோம்’ என்ற விழிப்​புணர்வு அணிவகுப்​பும் நடை​பெற்​றது. தொடக்க விழா​வில் இயற்கை மருத்​து​வம் சார்ந்த நூல்​களை வெளி​யிட்டு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் பேசி​ய​தாவது: எந்​தவொரு உயிருக்​கும் துன்​பம் தராத சைவ உணவு நமக்​குள் மன அமை​தி​யை​யும், மனத்​தெளிவை​யும் தரும்.

திரு​வள்​ளுவர், காந்​தி, பிதாகரஸ், ஆல்​பர்ட் ஐன்​ஸ்​டீன், பெர்​னாட் ஷா போன்ற அறிஞர்​கள் கூட சைவ உணவின் சிறப்​பு​கள் குறித்​து் பேசி​யுள்​ளனர். அதற்​காக சைவ உணவு என்​பது உயர்ந்த தகுதி என்​ப​தெல்​லாம் அல்ல. சைவ உணவு உலகத்​தில் உள்ள அனைத்து உயிர்​களு​ட​னும் நம்மை நெருக்​க​மாகப் பிணைக்​கிறது.

உடற்​ப​யிற்​சிக் கூடங்​களுக்​குச் சென்று பணம் செல​வழித்து உடம்பை வருத்​து​வதை விட, வீட்​டில் யோகா செய்​தால் 120 ஆண்​டு​கள் வரை கூட ஆரோக்​கிய​மாக வாழலாம். நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடிய​போது உச்​சரிப்​பில் பிழை இருந்​தது.

வேதங்​களை​யும் உபநிடதங்​களை​யும் பாடும்​போது எவ்​வளவு பக்தி இருக்​குமோ, அதே அளவு பக்​தி​யுடன், அர்த்​தத்தை புரிந்​து​கொண்டு தமிழ்த்​தாய் வாழ்த்​தைப் பாட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில் அரசு யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் என்​.மண​வாளன், உலக சைவ உணவுக் கழக தலை​வர் மஹாவீர் போத்​ரா, நிறு​வனர் தாராசந்த் துகார், செய​லா​ளர் சுதாகர், ரோட்​டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி, அடை​யார் ஆனந்த பவன் நிர்​வாக இயக்​குநர் கே.டி.ஸ்ரீனி​வாச ராஜா உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

<div class="paragraphs"><p>சென்னை எழும்பூரில் நடைபெற்ற ‘நேச்சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ தொடக்க விழாவில் இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டார். உடன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.மணவாளன், உலக சைவ உணவுக் கழக தலைவர் மஹாவீர் போத்ரா, செயலாளர் சுதாகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாய பணி நவ.1 முதல் ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in