100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாய பணி நவ.1 முதல் ரத்து

100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாய பணி நவ.1 முதல் ரத்து
Updated on: 
1 min read

சென்னை: தமிழக வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்ட அரசாணை​யின்​படி, அலு​வல​கங்​களில் பணி​யாற்​றும் பொது​மக்​கள் ஆவணப்​ப​திவு மேற்​கொள்ள ஏது​வாக வார விடு​முறை நாளான சனிக்​கிழமை​களில் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​கள் செயல்​பட​வும், அந்த அலு​வல​கங்​களில் அதன் வேலைப்​பளுவுக்கு தகுந்​த​வாறு தேவை​யான பணி​யாளர்​கள் பணி​யாற்ற சம்​பந்​தப்​பட்ட மாவட்ட பதி​வாளர்​களுக்கு உத்​தர​விட​வும் பதிவுத்​துறை தலை​வருக்கு அனு​ம​தி​யளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த செப்​.8-ம் தேதி தமிழக அரசுக்கு பதிவுத்​துறை தலை​வர் எழு​திய கடிதத்​தில், ‘‘எங்​கிருந்​தும் பதிவு என்ற குறிக்​கோளை எய்​தும் வகை​யில், சார்​ப​தி​வாளர்​கள் ஆவணப்​ப​திவு மட்​டுமின்றி பல்​வேறு கூடு​தல் நிர்​வாகப் பணி​களை மேற்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. எனவே, சனிக்​கிழமை​களில் ஆவணப்​ப​திவு காரண​மாக அலு​வல​கப் பணி​களில் பின்​னடைவு ஏற்​படு​கிறது.

வரும் காலங்​களில் அனைத்து ஆவணங்​களும் வரு​கை​யில்லா பதிவு, காகிதமில்லா முறை​யில் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள​தால், தற்​போது 100 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் நடை​முறை​யில் உள்ள சனிக்​கிழமை கட்​டாயப்​பணி என்​பதை கைவிடலாம் என்ற சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர் வெளி​யிட்ட அறி​விப்பை நவ.1-ம் தேதி முதல் செயல்​படுத்​தலாம்.

இதற்​காக 2022-ல் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்​டும்’’ என்று கோரி​யிருந்​தார்.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு, பதிவுத்​துறை தலை​வரின் கருத்​துகளை ஏற்​று, சனிக்​கிழமை​களில் செயல்​படும் 100 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​கள் நவ.1-ம் தேதி முதல் வார நாட்​களில் மட்​டுமே செயல்​படும். சனிக்​கிழமை கட்​டாயப்​பணி முறையை கைவிட முடி​வெடுத்து உத்​தர​விடப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாய பணி நவ.1 முதல் ரத்து
தக்காளி கிலோ ரூ.65 ஆக உயர்வு: தென்மேற்கு பருவமழை குறைந்ததால் சாகுபடி பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in