“தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது” - தஞ்சையில் உதயநிதி விமர்சனம்

ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி.

ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி.

Updated on
1 min read

தஞ்சாவூர்: தமிழகம் தற்​போது பெரிய பேரிடரில் சிக்​கிக் கொண்​டுள்​ளது என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​தநாட்​டில் நேற்று நடை​பெற்ற திமுக நிர்​வாகி இல்​லத் திருமண விழா​வில் அவர் பேசி​யது: தமிழகத்​தில் அமைந்​துள்ள சோஃபா மாடல் ஆட்​சி​யின் போலி பிம்​பம் கடந்த ஒரு மாதத்​தில் நொறுங்கி உள்​ளது. ஒவ்​வொரு நாளும் இந்த ஆட்​சி​யின் அவலங்​களை மக்​கள் புரிந்து வரு​கின்​றனர். அரசின் தவறுகளை இளைஞர்​கள் தட்​டிக்​கேட்​கத் தொடங்​கி​யுள்​ளனர். தட்​டிக்​கேட்​கும் இளைஞர்​களை​யும், திமுக​வினரை​யும் கைது செய்​யும் வேலையை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது. எனவே, இதுபோன்ற அடக்​கு​ முறை​களை எதிர்​கொள்ள திமுக​வுக்கு அதிக வழக்​கறிஞர்​கள் தேவைப்​படு​கின்​றனர்.

தூய சக்தி என்று சொன்​னவர்​கள், ஆட்​சிக்கு வந்​ததும் குதிரைபேரத்தை தொடங்​கி​விட்​டனர். தமிழகத்​தில் எங்கு பார்த்​தா​லும் மின்​வெட்டு ஏற்​பட்டு வரு​கிறது.

இதனால், விவ​சா​யிகள் அதி​கள​வில் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். முந்​தைய திமுக ஆட்​சி​யில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை மேட்​டூர் அணை வழக்​கம்​போல ஜூன் 12-ம் தேதி திறக்​கப்​பட்​டு, டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் வழங்​கப்​பட்​டது. ஆனால், தவெக அரசு, அணையை திறக்​க​வில்​லை. குறுவை சாகுபடி தொகுப்பு திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி போதாது என்று விவ​சா​யிகள் சாலைகளில் இறங்கி போராடி வரு​கின்​றனர். அந்​தப் போராட்​டத்​தை​யும், விவ​சா​யிகளை​யும் முதல்​வர் கொச்​சைப்​படுத்தி வரு​கிறார்.

ரூ.1 லட்​சம் கடன் வாங்​கிய விவ​சா​யிகளுக்கு ரூ.5,000 மட்​டுமே தள்​ளு​படி செய்​யப்​படும் என அறி​வித்​துள்​ளார். அதி​லும் பல்​வேறு நிபந்​தனை​கள் விதித்​து, பலருக்​கும் கடன் தள்​ளு​படி இல்லை என அறி​வித்​துள்​ளனர். அனைத்​தை​யும்​விட, தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஒழுங்கை இந்த ஆட்​சி​யாளர்​கள் படு​குழி​யில் தள்​ளி​யுள்​ளனர். சட்​டப்​பேர​வையா அல்​லது சினிமா தியேட்​டரா அல்​லது ஏதேனும் ஷூட்​டிங் ஸ்பாட்​டுக்கு வந்​து​விட்​டோமா என எங்​களுக்கு சந்​தேகம் வரும் அளவுக்கு சட்​டபேர​வை​யின் தரத்தை ஆளுங்​கட்​சி​யினர் குறைத்து கொண்​டிருக்​கின்​றனர்.

சென்​னை​யில் உள்ள பெரம்​பூர் தொகுதி மக்​களே, தெரி​யாமல் ஒரு​வரை வெற்றி பெற வைத்​து​விட்​டோம். அவர் எங்கே போனார், யாரேனும் பார்த்​தீர்​களா என கேட்டு புலம்​பு​கின்​றனர். ஒட்​டுமொத்த தமிழக​மும் மின்​சா​ரத்தை தேடி வரு​கிறது. தமிழகம் தற்​போது பெரிய பேரிடரில் சிக்​கிக் கொண்​டுள்​ளது. இதில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்​டியது நமது பொறுப்​பு. அதற்​​காக நாம் அனை​வரும் ஒற்​றுமை​யுடன் உழைக்க வேண்​டும். இவ்​​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி.</p></div>
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in