தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவு

தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் மின்​தேவை புதிய உச்​சம் அடைந்து ஒரே நாளில் 21,724 மெகா​வாட் பதி​வாகி இருப்​ப​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் எப்​போதும் இல்​லாத அளவிற்கு இந்​தாண்டு கடுமை​யான வெயில் பொது​மக்​களை வாட்டி வதைக்​கிறது. கடந்த 14ம் தேதி மாநிலத்​தின் மின் தேவை புதிய உச்​சத்தை அடைந்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: வாரத்​தின் தொடக்க நாளான திங்​கட்​கிழமை 21,629 மெகா​வாட் பதி​வான நிலை​யில் 14-ம் தேதி மின்தேவை 21,724 மெகா​வாட் என்ற புதிய வரலாற்று உச்​சத்தை எட்​டியது. இருப்​பினும், அன்​றைய மொத்த மின்​நுகர்வு 453.447 மில்​லியன் யூனிட்​கள் ஆக இருந்​தது. இது, 2026 ஏப்​ரல் 24 அன்று பதி​வான 471.456 மில்​லியன் யூனிட்​கள் என்ற அதி​கபட்ச தினசரி மின்​நுகர்வு சாதனையை விட குறைவு தான். இருப்​பினும், இது ஜூலை மாதத்​தில் புதிய உச்​சம் ஏற்​படு​வது அரிது தான். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.

தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவு
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு; 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in