தமிழகத்தின் மின்நுகர்வு புதிய உச்சம்: ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவு

தமிழகத்தின் மின்நுகர்வு புதிய உச்சம்: ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தின் மின்​நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்​லியன் யூனிட் பதி​வாகி புதிய உச்​சம் எட்டியது.

தமிழகத்​தில் நீர்​மின் உற்​பத்​தி,காற்​றாலை மின்​உற்​பத்​தி,சூரிய மின்​சக்தி மற்​றும் வெளி சந்​தைகளில் இருந்து மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்து வீடு​கள், தொழிற்​சாலைகள் உட்பட அனைத்து பிரி​வினருக்​கும், சீரான மின் விநி​யோகத்தை மின்​வாரி​யம் வழங்கி வரு​கிறது.

பொது​வாக, கோடைக் காலங்​களை பொறுத்​தவரை மின்​நுகர்வு 350 முதல் 370 மில்​லியன் யூனிட்​டு​களாக இருக்​கும். ஆனால், இந்​தாண்டு ஏப்​ரல் மாதமே 471 மில்​லியன் யூனிட் வரை உயர்ந்​தன. மேலும், தமிழகத்​தில் தென்​மேற்கு பரு​வழை நம்பி இருந்த சூழலில் எதிர்ப்​பார்த்த அளவு பெய்​ய​வில்​லை.

இதுத​விர, எல்​நினோ சூழல் உள்​ளிட்​ட​வற்​றால் பல மாவட்​டங்​களில் வெப்​பநிலை இயல்பை விட அதி​க​மாக நீடித்து வரு​கிறது. இதனால் மின்​சார பயன்​பாடு வழக்​கத்தை விட தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. அது​வும் ஜூலை மாதம் தொடக்​கம் முதலே படிப்​படி​யாக மின்​நுகர்வு அதி​கரித்து வரு​கிறது.

அதன்​படி, கடந்த புதன்​கிழமை 472.26 மில்​லியன் யூனிட்​களும், வியாழக்​கிழமை 473.57 பதி​வான நிலையில் கடந்த வெள்​ளிக்​கிழமை மாநிலத்​தின் தினசரி மின் நுகர்வு 475.45 மில்​லியன் யூனிட்​டு​களை எட்​டி​யுள்​ளது. இது மின்​வாரி​யத்​தின் வரலாற்​றிலேயே ஜூலை மாதத்​தில் பதி​வான மிக உயர்ந்த தினசரி மின்​நுகர்வு சாதனை​யாக​வும் பார்க்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழகத்தின் மின்நுகர்வு புதிய உச்சம்: ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவு
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in