தமிழகத்தில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும்
Updated on
1 min read

சென்னை: தெற்கு குஜ​ராத்​திலிருந்து மத்​திய கேரளா வரை சராசரி கடல் மட்​டத்​தில், ஒரு காற்​றழுத்​தத் தாழ்​வுப் பாதை (Trough) நில​வு​கிறது. இதன்​காரண​மாக, ஜூலை 8,9 ஆகிய தேதி​களில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், ஏனைய தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும்.

ஜூலை 10-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஜூலை 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஜூலை 12, 13 ஆகிய தேதி​களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் ஒரு சில இடங்​களில் ஜூலை 8-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரை 4 மாவட்​டங்​களில் வெப்​பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்​சி​யஸ் வரை அதி​கரிக்​கும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும்
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றியை எதிர்த்து வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in