​முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: முதலீடு​களை ஈர்ப்​ப​தில் ஆந்​தி​ரா, தெலங்​கானா ஆகிய மாநிலங்​களிடம் தமிழகம் தோல்வி அடைந்​துள்​ள​தாக பாமக தலை​வர் அன்​புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 2025 ஏப்​ரல் மாதம் முதல் டிசம்​பர் மாதம் வரையி​லான 9 மாதங்​களில் அரசு மற்​றும் தனி​யார் முதலீடு​களுக்​கான உறு​தி​மொழிகளை ஈர்ப்​ப​தில் முதல் 5 மாநிலங்​களின் பட்​டியலில் தமிழகம் இடம் பெற​வில்​லை.

இந்​தப் பட்​டியலில் ஆந்​திரா 25.30 சதவீத முதலீட்டு உறு​தி​மொழிகளு​டன் முதலிடத்​தைப்பிடித்​துள்ள நிலை​யில், தமிழகம் 4.9 சதவீத முதலீட்டு உறு​தி​மொழிகளு​டன் 6-ம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. முதலீடு​களை ஈர்ப்​ப​தில் ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்​களிடம் தமிழகம் தோல்வி அடைந்​திருக்​கிறது.

தமிழகத்​தில் முதலீடு செய்ய வேண்​டும் என்று ஏதேனும் நிறு​வனங்​கள் விரும்​பி​னால், மொத்த முதலீட்​டில் கணிச​மான பகு​தியை ஆட்​சி​யாளர்​களுக்கு லஞ்​ச​மாகத் தர வேண்​டி​யிருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. தமிழகத்​துக்கு வர முதலீட்​டாளர்​கள் அஞ்​சுவதற்கு இது​தான் காரணம். ஆட்சி மாற்​றத்​துக்குப் பிறகு முதலீட்டை ஈர்ப்​ப​தில் முதன்மை மாநில​மாக தமிழகத்தை ஈர்க்க பாமக நடவடிக்கை எடுக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித் துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி</p></div>
பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in