2027-ல் 24 பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்

2027-ல் 24 பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்
Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 2027-ம் ஆண்டில் 24 அரசு பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைப்படி, 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டப்படி, 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது.

அதன்படி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அலுவலகங்களும், அடுத்தாண்டு ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாகவும், அனைத்து சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும்.

இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள்,கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

பொது விடுமுறை தினங்கள்:

ஜனவரி 1 - வெள்ளி - ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 15 - வெள்ளி - பொங்கல்

ஜனவரி 16 - சனி - திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 - ஞாயிறு - உழவர் திருநாள்

ஜனவரி 22 - வெள்ளி - தைப்பூசம்

ஜனவரி 26 - செவ்வாய் - குடியரசு தினம்

மார்ச் 10 - புதன் - ரம்ஜான்

மார்ச் 26 - வெள்ளி - புனித வெள்ளி

ஏப்ரல் 1 - வியாழன் - ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு

ஏப்ரல் 7 - புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு

ஏப்ரல் 14 - புதன் - தமிழ்ப் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள்

ஏப்ரல் 19 - திங்கள் - மகாவீரர் ஜெயந்தி

மே 1- சனி - மே நாள்

மே 17 - திங்கள் - பக்ரீத்

ஜூன் 15 - செவ்வாய் - மொகரம்

ஆகஸ்ட் 15 - ஞாயிறு - சுதந்திர தினம்

ஆகஸ்ட் 15 - ஞாயிறு - மிலாதுன் நபி

ஆகஸ்ட் 25 - புதன் - கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 4 - சனி - விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2 - சனி - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 8 - வெள்ளி - ஆயுதபூஜை

அக்டோபர் 9 - சனி - விஜயதசமி

அக்டோபர் 28 - வியாழன் - தீபாவளி

டிசம்பர் 25 - சனி - கிறிஸ்துமஸ்

இதில் ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறையானது தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை:

அரசு விடுமுறையை பொறுத்தவரை திங்கள் - 2, செவ்வாய் - 2, புதன் - 4, வியாழன் - 2, வெள்ளி - 5, சனி - 6, ஞாயிறு - 2 நாட்கள் என வருகிறது. இதில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் வரும் போது அடுத்து அல்லது முன்னதாக வரும் சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

தைப்பூசம் ஜனவரி 22-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி செவ்வாய்க்கிழமையில் வருகிறது. இடையில் உள்ள சனி, ஞாயிறு விடுமுறை நாள். திங்கள்கிழமை ஒரு வேளை விடுப்பு கிடைக்கும் பட்சத்தில் வெள்ளி முதல் செவ்வாய் வரை 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

2027-ல் 24 பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்
“ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் கம்பீரம் ராஜராஜ சோழன்” - முதல்வர் விஜய் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in