

தமிழகத்தில் 2025-ம் ஆண் டின் தொடக்கத்தில் இருந்தே, பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், டெங்குவை பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி' வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தது.
இதனால், ஆண்டின் தொடக் கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கொசுக்களின் பெருக்கம் மேலும் அதிகரித்து, டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.
தமிழக சுகாதாரத் துறை டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தற்போது வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 2025-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், நாடு முழுவதும் டெங்குவால் 1,13,450 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். டெங்குவின் தீவிரத்தால் 95 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக பட்சமாக தமிழகத்தில் 20,866 பேர் பாதிக்கப்படுள்ளனர். அடுத்ததாக மகாராஷ்டிரா வில் 13,333 பேரும், கேரளாவில் 10,239 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் டெங்குவின் தீவிரத்தால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத் தில் 12 பேரும் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.