‘திர​வுபதி 2’-​வில் முதன்மை வில்​ல​னாக சிராக் ஜானி

‘திர​வுபதி 2’-​வில் முதன்மை வில்​ல​னாக சிராக் ஜானி
Updated on
1 min read

ரிச்​சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்​துசுதன், நட்டி நடராஜ், ஒய்​.ஜி.மகேந்​திரன், சரவண சுப்​பையா என பலர் நடித்​துள்ள படம், ‘திர​வுபதி 2’. மோகன் ஜி இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார்.

நேதாஜி புரொடக்‌ஷன்​ஸ், சோழ சக்​ர​வர்த்தி மற்​றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்​பரேஷன் இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்​குத் தணிக்கை குழு யு/ஏ சான்​றிதழ் கொடுத்​துள்​ளது. இதில் மூன்று வில்​லன்​கள் நடித்​துள்​ளனர். அதில் முதன்மை வில்​ல​னாக சிராக் ஜானி நடித்​துள்​ளார். அவரை படக்​குழு அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இயக்​குநர் மோகன் ஜி கூறும்​போது, “முகமது பின் துக்​ளக் கதா​பாத்​திரத்​தில் சிராக் நடித்​துள்​ளார். வெறும் வில்​ல​னாக மட்​டுமல்​லாது புத்​தி​சாலித்​தனம் நிறைந்த தனது சொந்த முடிவு​களின் விளைவு​களைத் தைரிய​மாக எதிர்​கொள்​பவ​ராக வரு​கிறார்.

உடல் ரீதி​யாக வலு​வாக​வும் அதே​நேரம், சிறந்த நடிப்பை உணர்​வுபூர்​வ​மாக கொண்டு வரும் வகையி​லான நடிகரை எதிர்​பார்த்​தோம். சிராக் முழு ஈடு​பாட்​டுடன் அந்த கதா​பாத்​திரத்​துக்​குத் தேவை​யான நடிப்​பைக் கொடுத்​துள்​ளார்” என்​றார். இப்​படத்​தின் டிரெய்​லர் மற்​றும் இசை விரை​வில் வெளி​யாக இருக்​கிறது.

‘திர​வுபதி 2’-​வில் முதன்மை வில்​ல​னாக சிராக் ஜானி
சென்னையில் இன்று தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in