ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுநர் உரை, பட்ஜெட், அரசு ஊழியர் ஓய்வூதியம் குறித்து ஆலோசனை
Published on

சென்னை: ஆளுநர் உரை, பட்​ஜெட், அரசு ஊழியர்​கள் ஓய்​வூ​தி​யத் திட்​டம், பொங்​கல் பரிசு உள்​ளிட்​டவை குறித்து முடி​வெடுப்​ப​தற்​காக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் வரும் 6-ம் தேதி தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் வரும் 20-ம் தேதி தொடங்​கு​கிறது. அன்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி உரை​யாற்​றுகிறார். அவரது உரை​யில் இடம் பெற வேண்​டியவை குறித்து அமைச்​சர​வை​யில் முடி​வெடுத்​து, அதனடிப்​படை​யில் உரை தயாரிக்​கப்பட வேண்​டும்.

அரசு ஊழியர்​கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பாக ஆய்வு செய்​வதற்​காக ஊரக வளர்ச்​சித் துறைச் செயலர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு நேற்று முன்​தினம் இறுதி அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளது. இதில் வழங்​கப்​பட்ட பரிந்​துரைகளின் அடிப்​படை​யில், தமிழக அரசு செயல்​படுத்த உள்ள ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பாக அறிவிக்க வேண்​டிய அவசி​யம் உரு​வாகி​யுள்​ளது.

மேலும், பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ரொக்​கப் பணம், அரிசி, சர்க்​கரை, கரும்பு உள்​ளிட்​ட​வற்றை வழங்க வேண்​டும். நடப்​பாண்டு தமிழக சட்​டப்​பேர​வைக்கு பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ள​தால், இத்​திட்​டத்தை முழு​மை​யாக செயல்​படுத்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அரிசி, சர்க்​கரை ஆகிய பொருட்​கள் கடைகளுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. ரொக்​கப் பணம் எவ்​வளவு கொடுப்​பது என்​பது தொடர்​பாக அரசு தீவிர ஆலோ​சனை​யில் உள்​ளது.

இவை தொடர்​பாக​வும், பட்​ஜெட்​டில் இடம் பெற வேண்​டிய விஷ​யங்​கள் குறித்து விவா​தித்து முடிவு​எடுப்பதற்காக, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் வரும் 6-ம் தேதி காலை 11 மணிக்கு தலை​மைச் செயல​கத்​தில் அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெறுகிறது. மேலும், போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் பகு​திநேர ஆசிரியர்​கள், இடைநிலை ஆசிரியர்​கள், துப்​புர​வுப் பணி​யாளர்​கள் விவ​காரம் மற்​றும் புதிய தொழில் முதலீடு​கள், விரி​வாக்​கம் தொடர்​பாக​வும் இக்​கூட்​டத்​தில்​ வி​வா​திக்​க வாய்​ப்​புள்​ளது.

ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
Happy New Year | பிறந்தது 2026 - நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in