தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்: சட்டப்பேரவை இம்மாதம் 3-வது வாரத்தில் கூடுவதற்கு வாய்ப்பு

தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்: சட்டப்பேரவை இம்மாதம் 3-வது வாரத்தில் கூடுவதற்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் அறி​விப்பு பிப்​ர​வரி இறு​தி​யில் எதிர்​பார்க்​கப்​படும் நிலை​யில், இடைக்​கால நிதி​நிலை அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமடைந்​துள்​ளது. இந்​நிலை​யில் பிப்​ர​வரி 3-வது வாரத்​தில் சட்​டப்​பேரவை கூட்​டம் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

தமிழகம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களின் சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் ஏப்​ரல் மாதம் நடை​பெற வாய்ப்​புள்​ளது. எனவே இதற்​கான அறி​விப்பு பிப்​ர​வரி இறு​தி​யில் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ள​தால், தற்​போதைய திமுக அரசால் வரும் 2026-27-ம் நிதி​யாண்​டுக்கான இடைக்​கால நிதி​நிலை அறிக்​கையை மட்​டுமே தாக்​கல் செய்ய முடி​யும். அந்த வகையில், இடைக்​கால நிதிநிலை அறிக்​கையை தயாரிக்கும் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்றன. துறை வாரியான கோரிக்கைகள், அதற்கான ஒதுக்கீடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது மற்​றும் வேளாண் நிதி​நிலை அறிக்​கைகளை தனித்​தனி​யாக தாக்​கல் செய்து வரு​கிறது. அதே அடிப்​படை​யில், தற்​போதும் இடைக்​கால நிதி​நிலை அறிக்​கைகள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. தேர்​தல் காலம் என்​ப​தால் பெண்​கள், இளைஞர்​களை கவரும் வகை​யில் புதிய அறி​விப்​புகள் இடம்பெறலாம் என கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், வரும் பிப்​.5-ம் தேதி தமிழக அமைச்சர​வைக் கூட்​டம் நடை​பெறுகிறது. அதில், நிதி​நிலை அறிக்​கை​யில் இடம்​பெறும் புதிய அறி​விப்​பு​களுக்​கான ஒப்​புதல் அளிக்​கப்​படும். அதன்​பின் இறுதி செய்​யப்​பட்​டு, ​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​படும்.

இந்​நிலை​யில், தமிழக நிதி​நிலை அறிக்கை தாக்​கல் செய்​யப்​படு​வதற்​காக சட்​டப்​பேரவைக் கூட்​டம் இம்மாதம் 3-வது வாரத்​தில் தொடங்​க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது.

தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்: சட்டப்பேரவை இம்மாதம் 3-வது வாரத்தில் கூடுவதற்கு வாய்ப்பு
சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் மாற்றுப் பணி நியமன உத்தரவு ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in