“தமிழகத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

‘துக்ளக்’ 56-வது ஆண்டு நிறைவு விழா
துக்ளக் வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். உடன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன்,காங்கிரஸ் மூத்த தலைவர்  வேலுச்சாமி உள்ளிட்டோர். படம்:எஸ். சத்தியசீலன்

துக்ளக் வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். உடன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன்,காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர். படம்:எஸ். சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தை​யும் சனாதனத்​தை​யும் பிரிக்க முடி​யாது என்று ‘துக்​ளக்' ஆண்டு விழா​வில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.

‘துக்​ளக்' வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா, சென்​னை, ஆழ்​வார்​பேட்​டை, நாரத கான சபா அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இவ்​விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக கலந்​துக் கொண்ட மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசும்​போது கூறிய​தாவது: தமிழ் மொழி பாரம்​பரிய​மும், தொன்​மை​யும் மிக்க மொழி. பிரதமர் மோடி தமிழை உலக அரங்​கில் எடுத்​துச் சென்று வரு​கிறார்.

உலக அரங்​கு​களில் திருக்​குறளின் பெரு​மை​களை கொண்டு செல்​கிறார். குறளில் ஆட்சி நிர்​வாகம், அறநெறி, மனி​தாபி​மானம் என அனைத்து விஷ​யங்​களும் சொல்​லப்​பட்​டுள்​ளன. பண்​டைய தமிழகம் ஆன்​மிக பூமி​யாக திகழ்ந்​தது. சோழர் ஆட்​சிக்​காலத்​தில் ஆன்​மிகம் தழைத்​தோங்​கியது. ஏராளமான கோயில்​கள் கட்​டப்​பட்​டன. தமிழகத்​தை​யும் சனாதனத்​தை​யும் பிரிக்க முடி​யுாது. இரண்​டும் பின்​னிப்​பிணைந்​தவை. ஆனால், சமீப கால​மாக சனா​தனம் மீதான மாண்பு குறைந்து வரு​கிறது. சனா​தனம் குறித்து கேலி​யும் விமர்​சன​மும் செய்​யப்​படு​கிறது.

தேசிய கல்விக் கொள்​கை​யில் தாய்​மொழி வழிக்​கல்விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப்​படு​கிறது. மும்​மொழிக்​கொள்கை மூலம் மாணவர்​கள் கூடு​தலாக ஒரு மொழியை கற்​றுக்​கொள்ள முடி​யும். பல மொழிகளை கற்​கும்​போது அவர்​களுக்கு அது பல வழிகளில் பயனுள்​ள​தாக இருக்​கும். தமிழகத்​தில் அண்​மைக்​கால​மாக தமிழ்​மொழிக் கல்வி சேர்க்​கை​யில் பின்​னடைவு ஏற்​பட்டு ஆங்​கில​வழிக் கல்வி மோகம் அதி​கரித்​துள்​ளது. அரசு பள்​ளி​களில் தமிழ்​மொழி கல்வி சேர்க்கை 32 சதவீதம் குறைந்​து, ஆங்​கில வழிக்​கல்வி சேர்க்கை 55 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.

2026 தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக பாஜக மாநில பொதுச்​செய​லா​ளர் ராம.ஸ்ரீனி​வாசன், திருச்சி வேலுச்​சாமி (காங்​கிரஸ்) ஆகியோர் உரை​யாற்​றினர். ராம.ஸ்ரீனி​வாசன் பேசும்​போது, “இந்தி எதிர்ப்​பில் உரு​வான கட்சி திமுக. தேசத்​துக்கு எதி​ரான சித்​தாந்த மரபை கொண்​டது அந்த கட்​சி. எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டுக்கு எதி​ராகவே பேசி வரு​கிறது. 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுகவை ஆட்​சி​யில் இருந்து அகற்ற வேண்​டு​மா​னால் அதற்கு வலிமை​யான கூட்​டணி தேவை. அதனால்​தான், அதி​முக​வுடன், பாஜக கூட்​டணி அமைத்​துள்​ளது” என்​றார்.

திருச்சி வேலுச்​சாமி பேசுகை​யில், “தற்​போது இருக்​கின்ற இதே கூட்​டணி தொடரும் என்று சொல்ல முடி​யாது. யார் காங்​கிரஸ் கட்​சிக்கு அமைச்​சர​வை​யில் பங்கு தரு​கிறார்​களோ அவர்​கள்​தான் ஆட்சி அமைக்க முடி​யும். இல்​லா​விட்​டால் அவர்​கள் எதிர்க்​கட்சி ஆகி​விடு​வர். 2026 தேர்​தலில் காங்​கிரஸுக்கு அமைச்​சர​வை​யில் பங்கு அளிக்​கும் கட்சி மட்​டுமே வெற்​றி​பெற முடி​யும்” என்று குறிப்​பிட்​டார்.

முன்னதாக, அரசியல், ஆன்​மிகம், தொடர்​பாக வாசகர்​கள் எழுப்​பிய பல்​வேறு கேள்வி​களுக்கு ‘துக்​ளக்​’ஆசிரியர் எஸ்​.குரு​மூர்த்தி பதிலளித்​தார். அப்​போது, ‘‘கட்சி பொறுப்​பில் இருந்து அண்​ணா​மலை நீக்​கப்​பட்​டது பாஜக​வும், அண்​ணா​மலை​யும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவை அகற்​று​வதற்​கான உத்​தியை எடுத்​தாக வேண்​டியது அவசி​யம்.

அந்த வகை​யில் அமித்ஷா எடுத்த உத்​தி​தான் இது. அவர் திறமை​சாலி, தமிழக அரசி​யலை கையில் எடுத்​துள்​ளார். அண்​ணா​மலை​யும் அதற்கு ஒத்​துழைப்​பார். புதிய கட்​சி​யான விஜய் கட்​சியை பொருத்​தவரை​யில் தேர்​தலில் போட்​டி​யிட்​டால்​தான் அக்​கட்​சி​யின் வாக்கு சதவீதம் தெரிய வரும்” என்​றார்​.

<div class="paragraphs"><p>துக்ளக் வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். உடன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன்,காங்கிரஸ் மூத்த தலைவர்  வேலுச்சாமி உள்ளிட்டோர். படம்:எஸ். சத்தியசீலன்</p></div>
பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in