பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!
Updated on
1 min read

சென்னை: பொங்​கல் பண்​டிகை அனை​வரது வாழ்க்​கை​யிலும் செழிப்​பு, மகிழ்ச்​சி​யைக் கொண்டு வரட்​டும் என்று அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள பொங்​கல் வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

பிரதமர் மோடி: தமிழ் கலாச்​சா​ரத்​தை​யும், இயற்​கை​யுட​னான நமது பிணைப்​பை​யும் பொங்​கல் கொண்​டாடு​கிறது. இந்​தப் பண்​டிகை அனை​வரின் வாழ்க்​கை​யிலும் செழிப்​பை​யும், மகிழ்ச்​சி​யை​யும் கொண்டு வரட்​டும். இயற்​கைக்கு மரி​யாதை செலுத்​து​வதை ஒரு வாழ்க்கை முறை​யாக மாற்ற பொங்​கல் நம்மை ஊக்​குவிக்​கிறது.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: உலகம் முழு​வதும் உள்ள தமிழ் சகோ​தர, சகோ​தரி​களுக்கு எனது நல் வாழ்த்​துகள். ஒவ்​வொரு வீட்​டிலும் மகிழ்ச்​சி, புதுப்​பிக்​கப்​பட்ட செழிப்பு மற்​றும் நல்ல ஆரோக்​கி​யத்தை நிரப்​பி, ஒற்​றுமை, அமைதி மற்​றும் முன்​னேற்​றத்​தின் உணர்வை வலுப்​படுத்​தி, 2047-ம் ஆண்​டுக்​குள் நம்மை ஒரு வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை நோக்கி இப்​பண்​டிகை வழிநடத்​தட்​டும்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: உலகத் தமிழர் அனை​வருக்​கும் தமிழ்ப் பண்​பாட்​டுப் பெரு​நாள், தைத்​திரு​நாள், உழவைப் போற்​றும் அறு​வடைத் திரு​நாளாக திகழ்வது பொங்​கலாகும். உழவர் பெருங்குடி மக்​களை வணங்​கி, புத்​தாடை, வண்​ணக் கோலம், விளை​யாட்​டுப் போட்​டிகள், கால்​நடைகளுக்கு நன்றி செலுத்​தும் பண்பு ஆகிய​வற்​றோடு தமிழகமெங்​கும் புதுப்​பானை​யில் பொங்​கும் பொங்​கல் மகிழ்ச்​சிப் பொங்​கலாக அமைய எனது நல் வாழ்த்​துகள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: உழவுத் தொழிலை மைய​மாகக்கொண்ட தமிழரின் வாழ்​வியலோடு இணைந்த பண்​பாட்​டுக் கொண்​டாட்​ட​மான பொங்​கல் திரு​நாளில், உலகத் தமிழர் அனை​வருக்​கும் எனது உளமர்ந்த பொங்​கல் வாழ்த்​துகள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை: உழைப்பை போற்​றும் உன்னத திரு​விழா​வான இந்த நன்​னாளில் இல்​லந்​தோறும் மகிழ்ச்சி பொங்​கி, நம் அனை​வரின் உள்​ளத்​தி​லும் ஊக்​க​மும், உத்​வேக​மும் சிறந்து விளங்​கட்​டும்.

இதே​போல, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தி.க. தலை​வர் கி.வீரமணி, பாமக நிறு​வனர் ராம​தாஸ், பாமக தலை​வர் அன்​புமணி, விசிக தலை​வர் திரு​மாவளவன், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, மநீம தலை​வர் கமல்​ஹாசன், தவாக தலை​வர் வேல்​முரு​கன், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, பெருந் தலை​வர் மக்​கள் கட்சி என்​.ஆர்​.தன​பாலன், தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் திரு​நாவுக்​கரசர், பாஜக நிர்​வாகி சரத்​கு​மார், இந்​திய கிறிஸ்தவ மதச் சார்​பற்ற கட்சி நிறு​வனர் எம்​.எஸ்​.​மார்​டின், இந்​திய தேசிய லீக் மாநிலத் தலை​வர் நாகூர் ராஜா உள்​ளிட்​டோரும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

சொந்த ஊர்​களில் உற்​சாகம்: சென்​னை, கோவை, மதுரை,திருப்​பூர், திருச்​சி, சேலம், பெங்​களூரு உள்​ளிட்ட நகரங்​களில் இருந்​து லட்​சக்​கணக்​கான மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். அங்கு தங்​கள் உறவினர்​களு​டன் பொங்​கல் பண்​டிகையை உற்​சாக​மாக கொண்​டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்: தலைவர்கள் வாழ்த்து!
“இயற்கை தந்த வரங்களுக்கு நன்றி சொல்லும் விழா பொங்கல்” - குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in