கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஹைதராபாத்தில் தமிழக கலைஞர்களின் கைவினைப் பொருள் கண்காட்சி

அமைச்​சர் மதன்​ராஜா தொடங்கி வைத்​தார்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷில்பராமம் வளாகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில், மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷில்பராமம் வளாகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில், மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு கைத்​திறத் தொழில்​கள் வளர்ச்​சிக் கழகம் சார்​பில், தெங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தில் மாபெரும் கைவினை பொருட்​கள் கண்​காட்​சியை அமைச்​சர் மதன்​ராஜா தொடங்கி வைத்​தார்.

ஹைத​ரா​பாத்​தில் உள்ள ஷில்​ப​ராமம் வளாகத்​தில் தமிழ்​நாடு கைத்​திறத் தொழில்​கள் வளர்ச்​சிக் கழகம் (பூம்​பு​கார்) சார்​பில் “மாபெரும் கைவினைப் பொருட்​கள் கண்​காட்​சி​யை” குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் துறை அமைச்​சர் மதன்​ராஜா தொடங்கி வைத்​தார். செப்ட​ம்​பர் 23-ம் தேதி வரை நடை​பெறும் கண்​காட்​சி​யில் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த 30 கைவினைக் கலைஞர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

இதில் தமிழகத்​தின் பாரம்​பரிய கைவினைப் பொருட்​களான வெண்​கலச் சிலைகள், பித்​தளை பாரம்​பரிய விளக்​கு​கள், தஞ்​சாவூர் ஓவி​யங்​கள், தஞ்​சாவூர் கலைத்​தட்​டு​கள், காகிதக் கூழ் பொம்​மை​கள், மரச் சிற்​பங்​கள், கற்​சிற்​பங்​கள், பித்​தளை கலைப்​பொருட்​கள், களிமண் மற்​றும் சுடுமண் பொருட்​கள், பிரம்பு மரச்​சா​மான்​கள், வாழை​நார் பொருட்​கள், சணல் பொருட்​கள், பனை ஓலைப் பொருட்​கள், ஆபரணங்​கள், ஊதுபத்தி மற்​றும் நறுமணப் பொருட்​கள், கைவினைத் துணி​கள் மற்​றும் கைத்​தறி ஆடைகள் உள்​ளிட்ட பல்​வேறு கைவினைப் பொருட்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

கைவினைக் கலைஞர்​கள் தங்​களது தயாரிப்​பு​களை கலை ஆர்​வலர்​கள் மற்​றும் பொது​மக்​களுக்கு நேரடி​யாக​வும், நியாய​மான விலை​யிலும் விற்​பனை செய்​கின்​றனர். இதன் மூலம் கைவினைக் கலைஞர்​களுக்கு கூடு​தல் சந்தை வாய்ப்​பு​கள் கிடைப்​பதுடன், அவர்​களின் வரு​மானத்தை அதி​கரித்து வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​து​வதற்​கும் இந்த கண்​காட்சி உதவும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷில்பராமம் வளாகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில், மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</p></div>
தாராபுரத்தில் பிரச்சாரத்தின்போது வாக்குவாதம்: பாதியில் திரும்பிய தவெக வேட்பாளர் சத்யபாமா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in