பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை/புதுடெல்லி: தமிழகத்​தில் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களை தவிர பொது இடங்​களில் மாடு​கள் உள்​ளிட்ட விலங்​கினங்​களை வெட்​டக்​கூ​டாது என்ற சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத்​தடை விதித்​துள்​ளது.

இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த மே மாதம் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “பக்​ரீத் பண்​டிகை மே 28 அன்று கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில் இந்த ஆண்டும் கோவை​யில் துடியலூர் சந்​தை, உக்​கடம், ரத்​தினபுரி மசூ​தி, செல்​வபுரம், குனிய​முத்​தூர், போத்​தனூர் போன்ற பல்​வேறு இடங்​களில் மாடு​கள் வெட்​டப்​பட​வுள்​ளன. அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களை தவிர பொது இடங்​களில் மாடு​களை வெட்​டக்​கூ​டாது. இதற்கு தடை விதிக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும், என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த இரு நீதிப​தி​கள் அமர்வு கடந்த மே 27 அன்​று, “தமிழகம் முழு​வதும் பக்​ரீத் பண்​டிகை மட்​டுமல்​லாது மற்ற நாட்​களி​லும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களை தவிர பொது இடங்​களில் இறைச்​சிக்​காக மாடு​கள் உள்​ளிட்ட எந்​தவொரு விலங்​கினங்​களை​யும் வெட்​ட தடை விதித்​தனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது, அப்​போது தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, சென்னை உயர் நீதி​மன்​றம் இந்த வழக்​கில் மனு​தா​ரர் தரப்​பில் வைக்​கப்​பட்ட கோரிக்​கை​யைத் தாண்டி தனது வரம்பை மீறி உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளது. இஸ்​லாம் மதத்​தில் பசுக்​களை பலி​யிடு​வது அத்​தி​யா​வசி​ய​மான மத சடங்கா இல்​லையா என்​பது குறித்​தும் தேவையற்ற கருத்தை உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

வழக்​கில் எழுப்​பப்​ப​டாத விச​யத்​தில் உயர் நீதி​மன்​றம் தலை​யிட்​டுள்​ளது. அதே​போல தமிழகத்​தில் கடந்த 1976-ல் பால் உற்​பத்தி மற்​றும் கிராமப்​புற பொருளா​தார மேம்​பாட்​டுக்​காக பசுவதை தடை செய்​யப்​பட்​டது. அன்​றைய அரசாணையை தற்​போதைய சூழலுக்கு பொருத்​திப் பார்க்க முடி​யாது என்றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு இடைக்​கால தடைவிதித்​தனர். மேலும் எதிர்​மனுதா​ர​ரான சூர்​யபிர​சாந்த் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து விசா​ரணையை தள்ளிவைத்​தனர்​.

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
“கால்பந்து நடுவர்களின் தவறான முடிவுகள் வருத்தம் அளிக்கின்றன” - அமிதாப் பச்சன் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in