முதல்வர் விஜய் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு

முதல்வர் விஜய் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழகம் தொடர்​பான ஒரு வழக்கு விசா​ரணை​யின்​போது, தமிழக முதல்​வர் விஜய்​யின் செயல்​பாடு​களுக்கு நீதிப​தி​கள் பாராட்டு தெரி​வித்​தனர்.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சஞ்​சய் குமார், சஞ்​சீவ் சச்​தேவா அமர்​வில் தமிழகம் தொடர்​பான குற்ற வழக்கு ஒன்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தமிழக அரசின் சார்​பில் வழக்​கறிஞர் பி.கருணாகரன் ஆஜராகி, “நான் ஏற்​கெனவே இந்த வழக்​கில் மனு​தா​ரர் சார்​பில் ஆஜராகி இருந்​தேன். தற்​போது அரசு வழக்​கறிஞ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ள​தால், இந்த வழக்​கின் பொறுப்பை வேறு ஒரு​வருக்கு மாற்ற வேண்​டும். வழக்கினை தள்​ளிவைக்க வேண்​டும்” என்று கோரிக்கை விடுத்​தார்.

இதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி​கள், வழக்கு விசா​ரணையை தள்​ளிவைக்க சம்​மதம் தெரி​வித்​தனர். அதைத் தொடர்ந்து பேசிய நீதிப​தி​கள், “தமிழகத்​தில் சில விஷ​யங்​கள் இன்​னும் சீரடைய வேண்​டி​யுள்​ளன. எனினும், தற்​போதைக்கு தமிழக முதல்​வரின் செயல்​பாடு​கள் குறித்து நல்ல தகவல்​கள் எங்​களுக்கு கிடைக்​கின்​றன. அந்த வகை​யில் நாங்​கள் மகிழ்ச்​சி​யடைகிறோம்” என்று கருத்து தெரி​வித்​தனர். “இதை தமிழக முதல்​வரின் செயல்​பாட்​டுக்கு கிடைத்த அங்​கீ​கார​மாகப் பார்க்​கிறேன்” என்று வழக்​கறிஞர்​ கருணாகரன்​ தெரி​வித்​தார்

முதல்வர் விஜய் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு
‘நான் தவறு செய்யவில்லை!’ - மேடையில் அழுத சத்யபாமாவுக்கு விஜய் ஆறுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in