மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரும் விவ​காரம்: ராம​தாஸ் மனு மீது 3 நாட்​களில் தீர்ப்​பளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரும் விவ​காரம்: ராம​தாஸ் மனு மீது 3 நாட்​களில் தீர்ப்​பளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு
Updated on
2 min read

புதுடெல்​லி: பாமக​வின் மாம்​பழம் சின்​னத்தை முடக்​கக் கோரும் விவ​காரத்​தில் அந்த கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் தாக்​கல் செய்​யும் மனுவை 3 நாட்​களுக்​குள் விசா​ரித்து தீர்ப்பு அளிக்க உரிமையியல் நீதி​மன்​றத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பாமக​வுக்கு மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கீடு செய்​ததற்​கான கடிதத்தை அன்​புமணி முகவரிக்கு கடந்த 2025 ஜூலை மாதம் தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யிருந்​தது. இந்த கடிதத்தை ரத்து செய்​ய​வும், தேர்​தல் ஆணை​யத்​தின் கடிதத்தை தனது முகவரிக்கு அனுப்ப தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக் கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ராம​தாஸ் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை சுட்​டிக்​காட்​டியதுடன், உள்​கட்சி பிரச்​சினை தீரும் வரை தேர்​தலை தள்ளிவைக்க முடி​யாது என்​றும், உரிமை​யியல் நீதி​மன்ற தீர்ப்​புக்கு பிறகே உயர் நீதி​மன்​றத்தை நாட முடி​யும் என்​றும் கூறி ராம​தாஸ் மனுவை கடந்த பிப்​ர​வரி 20-ம் தேதி தள்​ளு​படி செய்​தது.

இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக ராம​தாஸ் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்ய பக்​சி, வி.எம்​.பஞ்​சோலி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

ராம​தாஸ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விகாஸ் சிங் கூறும்​போது, “இந்த விவ​காரத்​தில் ராம​தாஸையோ, அன்​புமணி ராம​தாஸையோ பாமக​வின் தலை​வ​ராக தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரிக்​க​வில்லை என்​பது உயர் நீதி​மன்ற தீர்ப்​பில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளது” என்று வாதிட்​டார்.

நீதிபதி ஜோய்​மால்யா பக்சி கூறும்​போது, “அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிக்​குள் உரு​வாகும் உள்​கட்சி பூசலுக்கு மட்​டுமே தேர்​தல் ஆணை​யம் தீர்வு காண முடி​யும். அங்​கீ​காரமற்ற கட்​சிக்​குள் உரு​வாகி​யுள்ள கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதி​காரம் இல்லை என்​பது டெல்லி உயர் நீதி​மன்ற உத்​தர​வில் சுட்​டிக் காட்​டப்​பட்டு உள்​ளது” என்று தெரி​வித்​தார்.

அன்​புமணி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் மீனாட்சி அரோரா கூறும்​போது, ” சின்​னம் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனுவை மனு​தா​ரர் திரும்​பப் பெற்​றுள்​ளார். மனு​தா​ரர் ராம​தாஸ் தரப்​பில் சின்​னம் தொடர்​பாக எவ்​வித தடை உத்​தர​வை​யும் பெற​வில்​லை. உரிமை​யியல் வழக்​கில் உத்​தரவு பிறப்​பிக்​கும் வரை, ஆணை​யத்​தில் சமர்​பிக்​கப்​பட்ட ஆவணங்​களின்​படியே ஆணை​யம் நடந்து கொள்​ளும்” என்று தெரி​வித்​தார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட பிறகு நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் மனு​தா​ரர் ராம​தாஸ் ஏற்​கெனவே வழக்கு தொடர்ந்​துள்​ளார். இந்த விவ​காரத்​தில் உரிய மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் அவர் தாக்​கல் செய்​ய​லாம். புதிய மனுவை பிப்​ர​வரி 24-ம் தேதிக்​குள் அவர் தாக்​கல் செய்​யும்​போது, அந்த மனு மீது 3 நாட்​களுக்​குள் விசா​ரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்​டும். மேல்​முறை​யீட்டு மனு முடித்து வைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​திகள் உத்​தரவிட்டனர்.

மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரும் விவ​காரம்: ராம​தாஸ் மனு மீது 3 நாட்​களில் தீர்ப்​பளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு
தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in