சிலைக் கடத்தல் வழக்குகள் மீதான தமிழக அரசு நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிலைக் கடத்தல் வழக்குகள் மீதான தமிழக அரசு நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை / புதுடெல்லி: தமிழகத்​தில் சிலை திருட்டு வழக்குகளின் விசா​ரணை நிலை மற்​றும் எடுக்​கப்​பட்ட நடவடிக்கைகள் குறித்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிலை கடத்​தல் மற்​றும் வழக்​கின் கோப்​பு​கள் மாய​மான விவகாரம் தொடர்​பாக விசா​ரணை நடத்த சிறப்​புப் புலனாய்வுக்குழு அமைக்​கக்​கோரி வழக்​கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்​தில் நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் யானை ராஜேந்​திரன் தரப்​பில் வழக்​கறிஞர் பி.​வி.யோகேஷ்வரன் ஆஜராகி, சிலைக் கடத்​தல் வழக்​கின் 41 ஆவணங்​கள் மாய​மாகி​யுள்​ளன, இதில் தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. அது​போல, திருடப்​பட்ட பழமையான சிலைகள் அமெரிக்​கா, இங்​கிலாந்து நாடு​களில் உள்ளன. அதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட​வில்​லை என்றார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்​கறிஞர் பி.கருணாகரன், “சிலை திருட்டு வழக்கை கையாள சிறப்பு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்​ளார். எனவே இதுகுறித்த தகவல்​களை விரிவான அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய 4 வார அவகாசம் வேண்டும்” என்றார்.

இதனிடையே, மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் கே.எம்​.நட்​ராஜ் ஆஜராகி, சிலை கடத்​தல் விவ​காரம் பல மாநிலங்களில் விஸ்​வரூபம் எடுத்​துள்​ள​தாக​வும், வெளிநாடுகளுக்கு கடத்​தப்​பட்ட சிலைகளை மீட்​ப​தற்​கான நடவடிக்கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​வ​தாகவும் தெரிவித்தார்.

இதைத்​தொடர்ந்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: தமிழகத்​தில் சிலை திருட்டு வழக்​கில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை மற்​றும் சிலை திருட்டு வழக்​கின் ஆவணங்​கள் மாய​மான விவ​காரத்​தில் எடுக்​கப்​படுள்ள நடவடிக்கை குறித்து விரி​வான அறிக்​கையை தமிழக அரசு தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வி​சா​ரணை​யை நவ.4-ம்​ தேதிக்​கு​ தள்​ளிவைத்​தனர்​.

சிலைக் கடத்தல் வழக்குகள் மீதான தமிழக அரசு நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் - அமைச்சர் ஆகிறாரா சவுமியா அன்புமணி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in