இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் - அமைச்சர் ஆகிறாரா சவுமியா அன்புமணி?

சவுமியா அன்புமணி

சவுமியா அன்புமணி

Updated on: 
1 min read

சென்னை: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தல் முடிவுக்கு பிறகு அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்​யப்​படு​கிறது. தவெக கூட்ட​ணி​யில் பாமக இணை​யும் பட்​சத்​தில், சவுமியா அன்புமணியை அமைச்​சர​வை​யில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் தவெக தலை​மை​யில் உரு​வாக்​கப்​பட்ட மதச்​சார்​பற்ற சமூகநீதி வெற்​றிக் கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதி​முக இணைந்​தன. கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கூட்டணியில் இணை​யாமல் வெளி​யில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறி​வித்​தன. தவிர, தொடக்​கத்​தில் இருந்தே தவெக அரசை விமர்​சனம் செய்து வரும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது, தவெக மீது கடும் விமர்​சனங்​களை வைத்​தன. விசிக​வும் அவ்வப்போது அரசை விமர்​சித்து வரு​கிறது. இதனால், கம்யூனிஸ்ட்​கள், விசிக தலை​வர்​கள் மீது முதல்​வர் விஜய் வருத்தத்​தில் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, 4 எம்​எல்​ஏக்​கள் வைத்​துள்ள பாமகவை, தவெக கூட்​ட​ணி​யில் சேர்த்​துக் கொள்ள முதல்​வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்​கான நகர்​வு​கள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. அதே​நேரம், தவெக அமைச்சர்​களில் சிலரது செயல்​பாடு​கள் திருப்​தி​யாக இல்லாததால், மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு அமைச்​சர​வை​யில் மாற்​றம் செய்ய முதல்​வர் திட்​ட​மிட்​டுள்​ளார். அப்​போது, கூட்​ட​ணி​யில் பாமக இணை​யும் பட்சத்​தில், அக்​கட்​சி​யின் சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வர் சவுமியா அன்​புமணியை அமைச்​சர​வை​யில் சேர்க்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதுபற்றி கேட்​ட​போது, தவெக​வினர் கூறிய​தாவது: திமுக கூட்டணி​யில் இருந்​த​போது கூட்​டணி தலைமை குறித்து எந்த விமர்​சன​மும் செய்​யாமல் இருந்த கம்​யூனிஸ்ட் கட்​சிகள் புதி​தாக வந்​துள்ள தவெக அரசை மட்​டும் எதற்​கெடுத்​தா​லும் விமர்​சிப்​பது நியாய​மா. அவர்​கள் என்ன முடி​வில் உள்​ளனர் என்று தெரியவில்லை. அதனால், 4 எம்​எல்​ஏக்​களை வைத்​துள்ள பாமகவை கூட்​ட​ணி​யில் சேர்க்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ஏற்கெனவே பாமக​வும், விசிக​வும் ஒன்​றாக இணைந்து பயணித்துள்​ள​தால், எந்த பிரச்​சினை​யும் இல்​லை” என்​றனர்.

<div class="paragraphs"><p>சவுமியா அன்புமணி</p></div>
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர்: ரூ.2.23 கோடி ஆவின் கட்டிடம் திறப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in