சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
Updated on: 
1 min read

சிதம்​பரம் நடராஜர் கோயில் நிர்​வாகம் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர்​நீதி​மன்ற நீதிப​தி​கள், கோயில் நிர்​வாகத்​தில் உள்ள சீர்​கேடுகள் களை​யப்​படும் வரை நிர்​வாகத்தை கவனிக்க, ஓய்வு​பெற்ற உயர்​நீதி​மன்ற நீதிப​தி​கள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் உள்​ளிட்​டோரைக்​கொண்ட இடைக்​கால நிர்​வாகக்​குழுவை அமைத்து உத்​தர​விட்​டது.

முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜேந்​திரனை உறுப்​பின​ராகவும், பொது தீட்​சிதர்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மற்​றும் இந்​துசமய அறநிலை​யத்​துறை செய​லா​ளர் ஆகியோரை அலு​வல்​சாரா உறுப்​பினர்​களாகவும் நியமித்​தது. மேலும் கோயி​லின் அன்​றாட வரவு-செலவு கணக்​கு​களை பொது தீட்​சிதர்​கள் ஒவ்​வொரு மாதமும் 5-ம் தேதி நிர்​வாகக்​குழு​விடம் ஒப்​படைக்க வேண்​டும் என உயர்​நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​திருந்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்து கோயில் பொது தீட்​சிதர்​களின் செய​லா​ளர் ஜெயசூர்யா, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் சார்பில் உச்​ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்பட்டது.

அரசி​யலமைப்​பின் 26-வது பிரி​வின்​படி கோயிலை நிர்​வகிப்​ப​தற்கு தங்​களுக்கு உரிமை இருப்​ப​தாகவும், சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவு அந்த உரிமையில் தலை​யிடுவ​தாகவும் தீட்​சிதர்​கள் தரப்​பில் வாதிடப்​பட்​டது.

இந்த மேல்​முறையீட்டு மனு நேற்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல் பஞ்​சோலி அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, சிதம்​பரம் நடராஜர் கோயில் நிர்​வாகத்தை 5 பேர் கொண்ட குழு​விடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற சென்னை உயர்​நீதி​மன்​றத்​தின் உத்​தரவுக்கு நீதிப​தி​கள் இடைக்​காலத் தடை விதித்​தனர்.

தீர்ப்பு வெளியானதும் அதை வரவேற்று, சிதம்​பரம் கீழவீதி​யில் பொது தீட்​சிதர்​கள் பட்​டாசு வெடித்து கொண்டாடினர்.

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுச்சேரி: குறைந்த விலையில் தங்கம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.2.80 கோடி மோசடி

X