“ஒருவரின் தகுதியை நிர்ணயிக்க படிப்பு மட்டுமே போதாது!” - பிடிஆருக்கு சுந்தர்.சி பதில்

சுந்தர்.சி

சுந்தர்.சி

Updated on
2 min read

மதுரை: படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையையும், தகுதியையும் நிர்ணயித்து விடாது. ஒருவரின் செயல்பாடுகளும், நடத்தையும்தான் அவரது தகுதியை நிர்ணயிக்கும் என்று மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி, திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலளித்தார்.

மதுரையில் அவர் பிரச் சாரத்தின்போது பேசியதாவது: பழனிவேல் தியாகராஜன், மத்திய தொகுதியில் கழிப்பிட அறைகள், சமுதாயக்கூடம், ரேஷன் கடைகள் கட்டியதை சாதனையாகச் சொல்கிறார்.

ஒரு அமைச்சருடைய சாதனையா இது? தான் படித்தவர், பண்பாளர் என்று கூறிக் கொள்ளும் அவர், மத்திய தொகுதிக்கு ஒரு அமைச்சராக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கலாம்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மட்டும் எவ்வளவு வருமானம் வருகிறது. அந்த கோயிலுக்கு எதுவும் செய்யாமல், கவுன்சிலர்கள் செய்யும் வேலைகளை இவர் செய்ததாக பெருமைப்பட்டுக் கொள்கிறார். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட மேயரின் கணவர் பொன் வசந்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவரை போலீஸார் ஏன் கைது செய் தனர். இந்திராணியை மேயர் பதவியில் அமர வைத்தது யார்? மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் இவரது ஆதரவு கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெய்பாலாஜி யார்? அவர் யாரின் வலது கை? வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறாரே லட்சுமணன், அவர் யாருடைய ஆள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் என்னைப் பற்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். என்னை கூத்தாடி என்கிறீர்கள்.

உங்கள் துணை முதல்வர் உதயநிதி, சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்துள்ளார். தைரியம் இருந்தால் அவரைப் பார்த்துச் சொல்லுங்கள். வார்த்தைக்கு வார்த்தை படித்தவன் என்று சொல்லிட்டு, என்னை படிக்காதவன் என இகழ்கிறார்.

காமராஜர், எம்ஜிஆர் படிக்கவில்லை. உங்கள் தலைவர் கருணாநிதியும் படிக்கவில்லை. படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையையும், தகுதியையும் நிர்ணயித்து விடாது. ஒருவரின் செயல்பாடுகளும், நடத்தையும்தான் தகுதியை நிர்ணயிக்கும். இதுவரை உங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாத நீங்கள், இப்போது எனக்கு மட்டும் ஏன் பதில் சொல்கிறீர்கள்.

ஏன் என்றால், நான் கேட்பது மதுரை மக்கள் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள். படித்தவர், படித்தவர் என்று சொல்கிறீர்கள், பிறகு எதற்கு உங்களை நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி சாதாரண துறைக்கு மாற்றினார்கள். அதற்கு பதில் இருக்கிறதா உங்களிடம்? ஏன் உங்களுக்கு தகுதியில்லை என்பதாலா?

ஒரு நிதியமைச்சராக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு தொகுதிக்கு பெரிய திட்டங்களை கொண்டு வராமல் என்னை திட்டுகிறார். நான் என்னுடைய படங்களில் நடிகர்களுக்கு எத்தனையோ பட்டப்பெயர்கள் வைத்துள்ளேன்.

பழனிவேல் தியாகராஜன் என்னை ‘சினிமா சங்கி’ என்று பட்டப் பெயர் வைத்துள்ளார். திருப்பி உங்களுக்கு நான் பட்டப்பெயர் வைக்க ஒரு நிமிடம் ஆகாது. அந்தளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன். படித்தவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் உங்கள் படிப்புக்கு தகுந்தவாறு நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. ஒரு பாரம்பரிய குடும்பத்துக்கு தொடர்ந்து 2 முறை வாய்ப்பு கொடுத்தது போதும். முதல்முறை எம்எல்ஏவாக இருந்து 2-வது முறை தேர்தலை சந்தித்தபோது, எதிர்க்கட்சியாக இருந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.

அது நியாயம். அதனால் மீண்டும் அவருக்கு வாக்களித்து 2-வது முறை ஜெயிக்க வைத் தீர்கள். தற்போது 3-வது தேர்த லின்போதும், நினைத்ததை செய்ய முடியவில்லை, என்று வந்து நிற்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>சுந்தர்.சி</p></div>
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in