விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அமைச்சருக்கு நேரம் இல்லையா? - கரும்பு விவசாயிகள் கண்டனம்

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அமைச்சருக்கு நேரம் இல்லையா? - கரும்பு விவசாயிகள் கண்டனம்
Updated on
1 min read

கும்பகோணம்: ​விவ​சா​யிகளின் பிரச்​சினையை தீர்க்க வேளாண்​மைத் துறை அமைச்​சருக்கு நேரமில்லை என்​பது வேதனை அளிப்​பதாக கரும்பு விவ​சா​யிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாப​நாசம் வட்​டம் திரு​மண்​டங்​குடி​யில் உள்ள திருஆரூ​ரான் தனி​யார் சர்க்​கரை ஆலை நிர்​வாகம், கரும்பு விவ​சா​யிகளுக்கு வழங்க வேண்​டிய நிலு​வைத் தொகையை வட்​டி​யுடன் சேர்த்து வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த 2022, நவ.30-ம் தேதி முதல் 1,300-வது நாளாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து விவ​சா​யிகள் கூறியது: வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், திரு​மண்​டங்​குடி​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ளவிவ​சா​யிகளை பேச்​சு​வார்த்தைக்கு அழைப்பு விடுத்​துள்​ள​தாகத் தெரி​வித்​தார். ஆனால், அவர் அப்​படி யாரை​யும் அழைக்​க​வில்​லை. அவரது உதவி​யாளரை நாங்​கள் தொடர்பு கொண்​ட​போது, ‘அமைச்​சர் மிக​வும் பிசி​யாக’ இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

வேளாண்மைத் துறை அமைச்​சருக்​கு, விவ​சா​யிகளின் பிரச்​சினையைத் தீர்க்க நேரம் இல்லை என்​பது வேதனை​யாக உள்​ளது. பேச்​சு​வார்த்தை நடத்த கரும்பு விவ​சா​யிகளை அழைத்​த​தாக பொய் கூறி​யுள்ள அமைச்​சர் வினோத், எந்த விவ​சா​யி​யிடம் பேசி​னார் என்ற விவரத்தை வெளி​யிட வேண்​டும். இல்​லை​யெனில், பொய் பேசி​யதற்​காக காவல் நிலை​யத்​தில் அவர் மீது புகார் அளிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அமைச்சருக்கு நேரம் இல்லையா? - கரும்பு விவசாயிகள் கண்டனம்
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in