போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் 18 இடங்களில் திடீர் சோதனை

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் 18 இடங்களில் திடீர் சோதனை
Updated on
1 min read

சென்னை: ​போதைப் பொருள் கடத்​தல், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் குறித்​து, சென்​னை, ராம​நாத​புரம் மற்​றும் நாகை ஆகிய மாவட்​டங்​களில் 18 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர்.

ராம​நாத​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த நிசா​ருதீன் மற்​றும் சையத் ஆகியோர் மீது ஏற்​கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

அவர்​களுக்​குச் சொந்​த​மான இடங்​களில் நேற்று சோதனை நடை​பெற்​றது. இரு​வருடைய வங்கி கணக்​கு​கள் மூலம் பணப்​பரி​மாற்​றம் செய்​தவர்​களின் வீடு​களி​லும் சோதனை நடை​பெற்​றது.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி அருகே உள்ள விழுந்​த ​மாவடியைச் சேர்ந்த புல்​லட் மகாலிங்​கம் என்​பவரது வீட்​டிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. தற்​போது மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் கடத்​திய வழக்​கில் மகா​ராஷ்டிர சிறை​யில் இவர் அடைக்​கப்பட்​டுள்​ளார்.

புல்​லட் மகாலிங்​கத்​தின் வீடு, தோட்​டம் மற்​றும் அவரது சகோ​தரர் இல்​லங்​களில் 20-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சோதனை​யிட்​டனர். அவரது நண்​பர் புதுப்​பள்ளி ராஜ் மற்​றும் வடக்கு பொய்​கைநல்​லூரைச் சேர்ந்த உறவினர் சரண்​ராஜ் ஆகியோரின் வீடு​களி​லும் சோதனை நடை​பெற்​றது.

சென்​னை​யில் பெரம்​பூர் நெடுஞ்​சாலை​யில் உள்ள தொழில​திபர் அக்​பர் என்​பவரது இல்​லம், திரு​மங்​கலத்​தில் ஓய்வு பெற்ற எஸ்பி எத்​தி​ராஜ் என்​பவரது வீட்​டில் வாடகைக்கு வசித்து வரும் இலங்கை தமிழர் ஒரு​வரின் வீடு, செங்​குன்​றம் அடுத்த நல்​லூர் ஆற்​றந்​தாங்​கல் பகு​தி​யில் உள்ள கண்​ணன் என்​பவரது வீடு மற்​றும் கொரட்​டூர் உள்​ளிட்ட இடங்​களி​லும் சோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

நேற்று 18 இடங்​களில் சோதனை நடை​பெற்​றது. இதில் முக்​கிய ஆவணங்​கள், மின்​னணு ஆதாரங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் 18 இடங்களில் திடீர் சோதனை
காவலர்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த பிரேமலதா கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in