காவலர்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த பிரேமலதா கோரிக்கை

காவலர்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த பிரேமலதா கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி​கள் துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: காவல்​துறை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட மொத்த பணி​யிடங்​களில் 9,129 காலி​யிடங்​கள் உள்​ளன.

இந்த காலி​யிடங்​களை நிரப்​புவதுடன் தற்​போதைய மக்​கள்​தொகைக்கு ஏற்ப கூடு​தல் காவலர் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும். காவலர்​களின் பணி நேரத்தை 8 மணி நேர​மாக முறைப்​படுத்த வேண்​டும்.

இதனால், அவர்​களின் மன அழுத்​தம் குறை​யும். அதன்​மூலம் அவர்​கள் சிறப்​பாக பணி​யாற்​று​வர். சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படைகளின் எண்​ணிக்​கையை அதி​கரிப்​பதுடன் அதில் திருநங்​கைகளுக்​கும் பணி​வாய்ப்பு அளிக்க வேண்​டும். இதனால் அவர்​களுக்கு வேலை​யும் சமூக அந்​தஸ்​தும் கிடைக்​கும்.

ஊர்க்​காவல் படை​யில் 16 ஆயிரம் பேர் பணி​யாற்றி வரு​கிறார்​கள். தற்​போது அவர்​களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதி​ய​மாக வழங்​கப்​படு​கிறது. வாழ்க்கை செல​வினங்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் அவர்​களுக்​கான ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும்.

காவலர்​களுக்கு வழங்​கப்​படும் தினசரி உணவுப்​படியை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆகவும், மாதாந்​திர இடர்​படியை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிர​மாக​வும் உயர்த்தி வழங்க வேண்​டு்ம் இவ்​வாறு பிரேமலதா பேசி​னார்.

காவலர்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த பிரேமலதா கோரிக்கை
சட்டம் - ஒழுங்கு நிலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: பேரவையில் உதயநிதி - அமைச்சர்கள் காரசார விவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in