156 கிலோ எடை கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகர சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை

156 கிலோ எடை கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகர சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை
Updated on
1 min read

சென்னை: பிரசவ காலத்தில் பல்வேறு சிக்​கல்​களை சந்​தித்த 156 கிலோ எடை கொண்ட பெண்​ணுக்கு சிகிச்சை அளித்து தாயை​யும், சேயை​யும் சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் காப்​பாற்​றி​யுள்​ளனர்.

இதுகுறித்து சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​துவ கண்​காணிப்​பாளர் பாஸ்​கரன் ஆகியோர் கூறிய​தாவது: சென்​னையை சேர்ந்த 36 வயது பெண் விஜயா (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது).

செயற்கை கருத்​தரிப்பு முறை​யில் தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் கரு​வுற்​றார். 156 கிலோ எடை கொண்ட அந்த பெண் பிரசவக்​காலத்​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்​ட​தால், சேப்​பாக்​கத்​தில் உள்ள அரசு கஸ்​தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

தீவிர சுவாச தொற்​று, பேறு கால உயர் ரத்த அழுத்​தம், பேறு கால சர்க்​கரை நோய், தூக்​கத்​தில் மூச்​சுத்​திணறல் ஆகிய பாதிப்​பு​கள் அந்த பெண்​ணுக்கு இருந்​தன. முக்​கிய​மாக, படுத்து தூங்​கும் போது சுவாசிக்க முடி​யாத நிலை இருந்​த​தால், உட்​கார்ந்​த​படியே தூங்க வேண்​டிய நிலை இருந்​துள்​ளது.

மேலும், மூளையில் ரத்த உறைவு மற்றும் தைராய்டு சுரப்பி குறைபாடுகள், அந்த பெண்ணுக்கு இருந்தது. இது பேறு கால அபா​யத்தை அதி​கரிக்​கும் என்​ப​தால், கடந்த நவம்​பர் மாதம் 6-ம் தேதி உயர் சிகிச்​சைக்​காக ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டார்.

மருத்​து​வ​மனை​யின் பல்​துறை மேலாண்மை குழு​வினர் தீவிர சிகிச்​சை​யும், தொடர் கண்​காணிப்​பும் அளித்​தனர். அந்த கால​கட்​டத்​தில் அந்த பெண்​ணின் கர்ப்ப காலம் 32 வாரங்​கள் மட்​டுமே நிறைவடைந்​திருந்​தது. தொடர் சிகிச்​சை​யின் காரண​மாக அவருடைய உடல்​நிலை முன்​னேற்​றம் ஏற்​பட்​டது. நவம்​பர் 19-ம் தேதி சிசேரியன் மூலம் பிரசவம் நடை​பெற்​றது.

மிக​வும் சிக்​கலான இந்த சிகிச்​சை​யின் போது அந்த பெண்ணை முழு​மை​யாக படுக்க வைக்​கவோ, மயக்க மருந்து செலுத்​தவோ முடிய​வில்​லை. அந்த சவாலை சாதுரிய​மாக கையாண்ட மருத்​து​வர்​கள், வெற்​றிகர​மாக அறுவை சிகிச்சை செய்​தனர்.

இதன் பலனாக அந்த பெண்​ணுக்கு 2 கிலோ எடை​யில் பெண் குழந்தை பிறந்​தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு மீண்​டும் கஸ்​தூரிபா காந்தி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.

அங்கு சிறப்பு கண்​காணிப்பு வழங்​கப்​பட்​ட​தால், பூரண நலமடைந்த அந்த பெண் குழந்​தை​யுடன் வீடு திரும்​பி​யுள்​ளார். சிக்​கலான பாதிப்​புடன், அதீத உடல் பரு​மனுடன் வந்த கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை அளித்து தாயை​யும், சேயை​யும் மருத்​து​வர்​கள் காப்​பாற்​றினர். இது அரசு மருத்​து​வ​மனை​களின் மருத்​துவ சேவை​யில் ஒரு மைல் கல்​ ஆகும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

156 கிலோ எடை கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகர சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in