சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்திய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்திய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: ​கால​முறை ஊதி​யம், மற்​றும் சிறப்பு ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்​கக் கோரி சத்​துணவு - அங்​கன்​வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழ்​நாடு சத்​துணவு - அங்​கன்வாடி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் சென்னை ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடந்​தது.

அக்​கூட்டமைப்​பின் அமைப்​பாளர் இ.மாயமலை தலை​மை​யில் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் 500-க்​கும் மேற்​பட்ட சத்​துணவு பணி​யாளர்​கள் அங்​கன்​வாடி ஊழியர்கள் கலந்​து​கொண்​டனர்.

போராட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் மாயமலை கூறிய​தாவது: சத்​துணவு - அங்​கன்​வாடி ஊழியர்​களுக்​கான சிறப்​பூ​தி​யம் ரூ.2 ஆயிரத்​தில் இருந்து ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். அதோடு பணிக்​கொடை ரூ.5 லட்​சம் வழங்​கப்​படும் என திமுக தேர்​தல் வாக்​குறுதி அளித்​திருந்​தது.

அதை நம்பி நாங்களுக்​கும் வாக்​களித்தோம். ஆனால், ஆட்​சிக்கு வந்து நான்​கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி​யும் எங்​களின் ஒரு கோரிக்​கை​யைகூட அரசு நிறைவேற்​ற​வில்​லை. முதல்​வர் வெளி​யிட்ட புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தால் எங்​களுக்கு எந்த பயனும் கிடைக்​காது.

12 லட்​சம் அரசு ஊழியர்​களில் முக்​கால்​வாசி பேர் சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி பணி​யாளர்​கள்​தான். ஓய்​வூ​திய விஷ​யத்​தில் சத்​துணவு ஊழியர்​களை​யும், அங்​கன்​வாடி பணி​யாளர்​களை​யும் அரசு பாகு​பாடுடன் நடத்​துகிறது.

பிப்.3 முதல் பணி புறக்கணிப்பு: கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யத்தை ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்​கு​வது, பணிக்​கொடை ரூ.5 லட்​சம், காலி​யாக​வுள்ள 60 ஆயிரம் சத்​துணவு, அங்​கன்​வாடி பணி​யாளர் இடங்​களை நிரப்​புவது, அரசு ஊழியர்​களைப் போன்று 12 மாத மகப்​பேறு விடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜன.30-ம் தேதி அன்று சென்​னை​யில் லட்​சக்​கணக்​கான சத்​துணவு பணி​யாளர்​களும் அங்​கன்​வாடி ஊழியர்​களை​யும் திரட்டி முதல்​வர் அலு​வல​கத்​தில் முறை​யீடு செய்​வோம்.

எங்​கள் கோரிக்​கைகளை​யும், திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும், உயர் நீதி​மன்ற - உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களை​யும் நிறை வேற்​றா​விட்​டால் பிப்​.3-ம் தேதி முதல் பணி​களைப் புறக்​கணித்​து​விட்டு கால​வரையற்ற தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தி​லும், தொடர் மறியல் போராட்​டத்​தி​லும் ஈடு​படு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார். தமிழ்​நாடு சத்​துணவு ஊழியர் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜெஸி உள்​ளிட்​ட நிர்​வாகி​கள்​ உடனிருந்​தனர்​.

<div class="paragraphs"><p>ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடத்திய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள். | <em><strong>படம்: எஸ்.சத்தியசீலன்</strong></em> |</p></div>
வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in