பால் உற்பத்தியாளருக்கு மானிய விலையில் தீவனம்

பால் உற்பத்தியாளருக்கு மானிய விலையில் தீவனம்
Updated on: 
1 min read

சென்னை: கால்​நடை பராமரிப்பு, பால்​வளம், மீன்​வளத் துறை செய​லா​ளர் அனு ஜார்ஜ் நேற்று வெளி​யிட்​டுள்​ள அரசாணைகள் விவரம்:

மாநிலம் முழு​வதும் தகுதி​யுள்ள பால் உற்​பத்​தி​யாளர்​களுக்கு ஒரு கால்​நடைக்கு நாள் ஒன்​றுக்கு 3 கிலோ வீதம், 10 மாதங்​களுக்​குக் கிலோவுக்கு ரூ.2 மானிய விலை​யில் தர​மான அடர் கால்​நடை தீவனம் வழங்​கப்​படும். இதன் மூலம் 45 ஆயிரம் பேர் பயனடைவர். இத்​திட்​டத்​துக்கு மானியத் தொகை​யாக ரூ.8 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது.

மானியக் கோரிக்கை அறி​விப்​பின்​படி, கறவை மாடுகளின் வளர்ச்சி, உடல்​நலம் மற்​றும் பால் உற்​பத்​தித்திறனை மேம்​படுத்​தும் நோக்​கில், 50 ஆயிரம் கன்​றுகளுக்கு ஒரு ஆண்​டுக்கு தாதுப்​பொருள் கலவை 50 சதவீதம் மானியத்​தில் வழங்க ரூ.2.76 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது. இதன் மூலம் 850 டன் தாது உப்​புக் கலவை வழங்​கப்​படும். ஆவின் கூட்​டுறவுச் சங்​கங்​களில் தொடர்ந்து பால் ஊற்றி வரும் உறுப்​பினர்​கள் இத்​திட்​டத்​தில் பயன்​பெறத் தகுதி​யானவர்​கள்” என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

பால் உற்பத்தியாளருக்கு மானிய விலையில் தீவனம்
“அறிவு உலகமா... இல்லை ஊழல் உலகமா?” - பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கருத்து

X