கூடலூர் அருகே யானை தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு

கூடலூர் அருகே யானை தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு
Updated on
1 min read

பந்தலூர்: நீல​கிரி மாவட்​டம் கூடலூர் அருகே உள்ள புத்​தூர் வயல் கிராமத்தைச் சேர்ந்​த ஷாஜகான் மகன் மிஸ்​ஹாப் (14). 8-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்நிலையில், நேற்​று​ முன்​தினம் வெளியே சென்​று​ விட்டு வீடு திரும்பும்போது திடீரென சாலைக்கு வந்த ஒரு யானை, மிஸ்​ஹாப்பை தாக்​கியது. இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வனவிலங்கு​கள் தாக்​குதலில் இருந்து காக்க வலி​யுறுத்தி பிதர்​காடு அருகே மக்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து நெலாக்​கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

கூடலூர் அருகே யானை தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு
ஆந்திர இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in