வாணியம்பாடி அருகே கபடி விளையாடியபோது மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு

முகேஷ்.

முகேஷ்.

Updated on
1 min read

வாணியம்பாடி: ​வாணி​யம்​பாடி அருகே கபடி விளை​யாடிக் கொண்​டிருந்த 12-ம் வகுப்பு மாண​வர் திடீரென மயங்கி விழுந்து பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திருப்​பத்​தூர் மாவட்​டம் வாணி​யம்​பாடி வட்​டம் லாலா ஏரி பகு​தி​யில் தனி​யாருக்​குச் சொந்​த​மான நடுநிலைப்​பள்ளி இயங்கி வரு​கிறது. இப்​பள்ளி விளை​யாட்டு மைதானத்​தில், பள்​ளி​களுக்கு இடையே கபடிப் போட்​டிகள் நேற்று நடை​பெற்​றன.

இதில் வட்​டார அளவி​லான அரசுப் பள்​ளி​கள், அரசு நிதி உதவி பெரும் பள்​ளி​கள் மற்​றும் தனி​யார்ப் பள்​ளி​கள் என 36 பள்​ளி​களி​லிருந்து மாண​வர்​கள் பங்​கேற்று விளை​யாடினர்.

இதில், திம்​மாம்​பேட்டை அரசு மேல்​நிலைப்​பள்​ளி​யில் 12-ம் வகுப்பு படித்து வரும் திகு​வா​பாளை​யம் கிரா​மத்​தைச் சேர்ந்த மாண​வர் முகேஷ் (17) கபடிப் போட்​டி​யில் நேற்று விளை​யாடி​னார். அப்​போது மாண​வர் முகேஷ் திடீரென மைதானத்​தில் மயங்கி விழுந்​தார்.

உடனடி​யாக அங்​கிருந்த மருத்​துவ குழு​வினர் அந்த மாண​வ​ருக்கு முதலுதவி சிகிச்சை அளித்​தனர். பிறகு மேல் சிகிச்​சைக்​காக வாணி​யம்​பாடி அரசு மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு மாண​வரைப் பரி​சோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். இதுகுறித்து தகவல் அறிந்​ததும் வாணி​யம்​பாடி கிரா​மிய காவல்​துறை​யினர் வழக்​குப்​ப​திவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​ற​னர்​.

<div class="paragraphs"><p>முகேஷ்.</p></div>
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நிறைவு: சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் விவரம் சமர்ப்பிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in