தூத்துக்குடி அருகே அரிய வானியல் நிகழ்வாக பலத்த சுழல் காற்று: சுங்கச்சாவடி மேற்கூரைகள் பறந்தன

தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை மேகம் கீழே சுழன்று வருவது போல பலத்த சுழல் காற்று வீசியது.

தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை மேகம் கீழே சுழன்று வருவது போல பலத்த சுழல் காற்று வீசியது.

Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி வாகைகுளம் பகு​தி​யில் நேற்று திடீர் சுழல் காற்று வீசியது. இதில் சுங்​கச்​சாவடி மற்​றும் தனி​யார் பொழுது​போக்கு பூங்​கா​வில் மேற்​கூரைகள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதில் 6 பேர் காயமடைந்​தனர்.

தூத்​துக்​குடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் நேற்று காலை முதல் வெயில் சுட்​டெரித்​தது. இந்​நிலை​யில் புதுக்​கோட்​டை, வாகைகுளம் பகு​தி​களில் மாலை 5 மணி​யள​வில் திடீரென மழை பெய்​யத் தொடங்​கியது. அப்​போது பலத்த சுழல் காற்று வீசி​யது. வாகைகுளம் விமான நிலை​யம் அருகே அமைந்​துள்ள சுங்​கச் சாவடி​யின் மேற்​கூரைகள் காற்​றில் அடித்​துச் செல்​லப்​பட்​டு, உயர் அழுத்த மின்கம்​பி​யில் விழுந்​தன.

மேலும், அருகே அமைந்​துள்ள தனி​யார் பொழுது​போக்கு பூங்​கா​விலும் மேற்​கூரை தகரங்கள் காற்​றில் பறந்​துஅங்கிருந்தவர்​கள் மீது விழுந்​தன. இதில் திருநெல்​வேலியைச் சேர்ந்த ஆறு​முகத்​தாய், சோனிக்​கா, ஆகாஷினி, தூத்​துக்​குடி கோரம்​பள்​ளம் பகு​தி​யைச் சேர்ந்த ஐயப்​பன், மோகன் உள்​ளிட்ட 6 பேர் காய

மடைந்​தனர். மேலும், விமான நிலைய வளாகத்​திலும் சுழல் காற்று வீசியது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை வீசிய இந்த ​காற்​றால் பலத்த சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே இந்த சுழல் காற்று மிக​வும் அபூர்​வ​மான நிகழ்வு என வானியல் ஆர்​வலர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர். மேகம் சுழன்று கீழே இறங்​கு​வதுபோல சுழல்​காற்று வீசி​யது. இந்தகாட்​சியைக் கண்ட சிலர் செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் பரப்​பி​யுள்​ளனர். இது பேசுபொருளாக மாறியுள்ளது.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை மேகம் கீழே சுழன்று வருவது போல பலத்த சுழல் காற்று வீசியது.</p></div>
"வார்த்தைகளில் கவனம் தேவை" - ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in