மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்தம்

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது
காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஆக்​டோ- ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் பங்கேற்ற 500-க்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ- ஜியோ சார்​பில் அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும் நீண்​ட​கால​மாக போராடி வந்த நிலை​யில், அரசு ஊழியர்​களுக்கு தமிழ்​நாடு உத்​தர​வாதப்​படுத்​தப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்டம் என்ற புதிய ஓய்​வூ​தியத் திட்​டத்தை தமிழக அரசு கடந்த ஜன.3-ம் தேதி அறி​வித்​தது. இதனை ஏற்றுக்கொண்ட ஜாக்​டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் அதற்காக முதல்​வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்​நிலை​யில், தமிழக அரசு அறி​வித்​துள்ள இந்த புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ஏற்​கப்போவதில்லை என 18-க்​கும் மேற்​பட்ட ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​கள் ஒன்​றிணைந்து ஆக்​டோ- ஜியோ என்ற புதிய கூட்​டமைப்பை ஏற்​படுத்​தின.

இந்த கூட்டமைப்பு சார்பில் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம், சத்​துணவு-அங்​கன்​வாடி ஊழியர்​களுக்கு காலமுறை ஊதி​யம், ஊதிய முரண்​பாடுகளைக் களைவது, அரசு துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவது, தொகுப்​பூ​தி​யம், மதிப்​பூ​தி​யம், சிறப்பு கால​முறை ஊதிய முறை​களை நீக்​கு​வது உள்பட 21 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தப்பட்டன.

இதற்காக பிப்.3 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக ஆக்​டோ-ஜியோ மாநிலத் தலைமை அமைப்​பாளர் இரா.​பாலசுப் பிரமணி​யன் அறி​வித்திருந்​தார். அதன்​படி, ஆக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் தமிழகம் முழு​வதும் மாவட்டத் தலைநகரங்​களில் அறிவித்தபடி நேற்று வேலைநிறுத்​தப் போராட்​டம் நடந்​தது.

சென்​னையில் மாவட்ட ஆட்​சி​யர் அலுவல​கம் அருகே கூட்டமைப்பின் மாநில இணை அமைப்பாளர் மு.அ​முதா தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் சத்​துணவு-அங்கன்​வாடி பணியாளர்​கள், சுகா​தா​ரத் துறை ஊழியர்​கள், ஆசிரியர்​கள் 500-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து ​கொண்​டனர். தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டதால் அவர்​கள் அனை​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

<div class="paragraphs"><p>காலமுறை ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். | <em>படம்: ம.பிரபு</em> |</p></div>
பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் புழங்க அரசே காரணம்: அதிமுக, பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in