பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் புழங்க அரசே காரணம்: அதிமுக, பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் புழங்க அரசே காரணம்: அதிமுக, பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு
Updated on
2 min read

சென்னை: பள்ளி மாணவர்​களிடம் போதைப் பொருள் புழக்​கத்​துக்கு தமிழக அரசே காரணம் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக தலை​வர்​கள் நயி​னார், அண்​ணா​மலை, அமு​முக பொதுச்​ செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை வியாசர்​பாடி​யில் இயங்கி வரும் அரசு மேல்​நிலைப் பள்​ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்​துச் சென்ற சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்தி உள்ள நிலை​யில், இந்தச் சம்​பவத்​துக்கு காரணம் தமிழக அரசு தான் என அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: அறி​வுப்​பூர்​வ​மான கல்விக்கு வித்​திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்​கள் கையில் அதி​முக ஆட்சி லேப்​டாப்பை கொண்டு சேர்த்​தது. ஆனால், இன்​றைய திமுக ஆட்​சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்​பொருள் தான் சென்​றுள்​ளது.

இது எவ்​வளவு பெரிய வெட்​கக்​கேடு. ஆனால், இதைப்பற்றி சிறிதும் கவலைப் படாத ஒரு முதல்​வர் நமக்கு வாய்த்​திருப்​பது ஆகப்​பெரும் சாபக்​கேடு. கஞ்​சா, போதைப்​பொருள் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​தாமல் வேடிக்கை பார்ப்​பதன் மூலம், ஸ்டா​லின் மாடல் திமுக அரசு தமிழகத்​தின் எதிர்​காலத்​துக்கு மாபெரும் துரோகத்தை இழைத்​துள்​ளது.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அப்பா என்ற அடைமொழிக்கு ஆசைப்​படும் முதல்​வர் ஸ்டா​லின், தனது கண்​முன்னே பள்ளிக் குழந்​தைகள் இப்​படி போதை​யில் மூழ்​கித் தடம் புரள்​வதைக் கண்​டும் காணா​மல் கடந்து போவது அலட்​சி​யத்​தின் உச்​சம். பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்​கப்​படு​கிறது என்​றால் திமுக​வின் ஏவல்​துறை எந்​தளவுக்கு ஆழ்ந்த உறக்​கத்​தில் இருக்க வேண்​டும்.

தங்​களின் அவல ஆட்​சிக்கு எதி​ராக சமூக வலை​தளங்​களில் பதி​விடு​பவர்​கள் மீதும் தங்​கள் வாழ்​வா​தா​ரத்​ துக்​காகப் போராடு​பவர்​கள் மீதும் பொய் வழக்கு போடு​வ​தில் மட்​டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்​திக் கொண்​டிருந்​தால், நமது சமூகக் கட்​டமைப்பை அரித்​துக் கொண்​டிருக்​கும் போதைப் பொருட்​களை எப்​படி ஒழிக்க முடி​யும்?

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை: புத்​தகம் வைத்​திருக்க வேண்​டிய கைகளில், கஞ்சா பொட்​டலம் என்​பது, வருங்​கால சந்​த​தி​யினர் எதிர்​காலம் குறித்த அச்​சத்​தை​யும், கவலை​யை​யும் ஏற்​படுத்​துகிறது. அடிப்​படை வசதி​கள் கூட இல்​லாத அரசுப் பள்ளிகளில், தற்​போது போதைப்​பொருள் புழக்​க​மும் சேர்ந்து கொண்​டிருக்கிறது.

பிறகு எப்​படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதி​கரிக்​கும். 16 வயது சிறு​வனுக்​குக் கூட கஞ்சா கிடைக்​கும் இடம் தெரிந்​திருக்​கிறது. சென்னை மாநகரக் காவல்​துறைக்கு இன்​னும் தெரிய​வில்​லை.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: பள்ளி, கல்​லூரி மாணவர்​களை குறி​வைத்து விற்​பனை செய்​யப்​படும் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை கண்​காணிக்​கவோ, கட்​டுப்​படுத்​தவோ தவறிய திமுக அரசின் காவல்​துறை​யால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்​கள் கஞ்சா பொட்​டலத்தை எடுத்து வரும் அளவுக்​கான சூழல் உரு​வாகி​யுள்​ளது.

கொலை, கொள்​ளை, பெண்​களுக்கு எதி​ரான குற்​றச்​சம்​பவங்​களுக்​கும் அடிப்​படை காரண​மாக திகழும் கஞ்சாஉள்​ளிட்ட போதைப் பொருட்​களின் நடமாட்​டத்தை மென்​மேலும் ஊக்​கு​விப்​பது தான் திரா​விட மாடல் அரசின் சாதனை​யா?

பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் புழங்க அரசே காரணம்: அதிமுக, பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - சென்னையில் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in