மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நவ.26-ம் தேதி பொது வேலைநிறுத்தம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மத்​திய அரசு அமல்​படுத்​தி​யுள்ள 4 புதிய தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் நவ.26-ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும்என மத்​திய தொழிற்​சங்​கங்​கள் கூட்​டாக அறி​வித்​துள்​ளன.

இதுதொடர்​பாக ஐஎன்​டி​யுசி, ஏஐசிடி​யுசி, எச்​எம்​எஸ், சிஐடி​யு,தொமுச உள்பட 10 மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த 29 தொழிலா​ளர் நலச்சட்​டங்​களை நீக்​கி​விட்டு அவற்​றுக்கு பதிலாக புதி​தாக 4 தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களை மத்​திய அரசு உரு​வாக்கி அவற்றை நவ.21 முதல் அமல்​படுத்​தி​யுள்​ளது.

தொழிலா​ளர் விரோத, முதலா​ளி​களுக்கு ஆதர​வான இந்த சட்​டங்​களை தன்​னிச்​சை​யாக நடை​முறைப்​படுத்​தி​யிருப்​ப​தற்கு மத்​திய தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழுசார்​பில் கடும் கண்டனத்தை தெரி​வித்​துக் ​கொள்​கிறோம்.

நான்கு தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களும் நவ. 21 முதல் அமல்​படுத்​தப்​படும் என ஜனநாயக விரோத, தன்​னிச்​சை​யான அறிவிக்​கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறி​முறை​களை​யும் மீறும் செயல். இது தொழிலா​ளர் நலன்​களை முற்​றி​லும் சிதைத்​துள்​ளது.

ஏற்​கெனவே உள்ள 29 தொழிலா​ளர்நலச்​சட்​டங்​களை நீக்​கி​விட்டுபுதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்களை இயற்​றும்போது தொடக்க நிலை​யிலேயே தொழிற்​சங்​கங்​களும், தொழிலா​ளர் நல கூட்​டமைப்​பு​களும் கடுமை​யாக எதிர்ப்பு தெரி​வித்​தன.

கடும் எதிர்ப்பு இருந்த நிலை​யில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றியை தொடர்ந்து 4 தொழிலா​ளர் சட்​டத்​தொகுப்​பு​களை​யும் மத்​திய அரசு திடீரென அமல்​படுத்​தி​யுள்​ளது. இவை உழைக்கும் வர்க்​கத்​தினரின் நலன்​களுக்கு முற்​றி​லும் எதி​ரானவை. இந்​தச் சட்​டத்​தொகுப்​பு​களை தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரங்​களுக்கு எதி​ரான இனரீ​தியி​லான தாக்​குதலாகக் கருதுகிறோம்.

இவை தொழிலா​ளர்​களை அடிமை​யாக்​கு​வதுடன் அவர்​களின் உரிமை​களை முற்​றி​லும் பறிக்​கும். புதிய சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிற்​சங்​கங்​கள்மற்​றும் தொழில் கூட்​டமைப்​பு​கள் சார்​பில் நவ.26-ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்தப் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​படு​கிறது.

தொழிலா​ளர் விரோத சட்​டத்​தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிலா​ளர்​கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்ற வேண்​டும். அதோடு வரும்திங்​கட்​கிழமை முதல் வாயிற்​கூட்​டம், தெரு​முனைக் கூட்​டம்என எதிர்ப்பு நடவடிக்கை பணி​களில் ஈடுபட வேண்​டும். இந்த நான்கு சட்​டத்​தொகுப்​பு​கள் வாபஸ் பெறப்​படும்​வரை உழைக்​கும் மக்​கள் வலிமை​யுடன் போ​ராடு​வார்​கள் என்ற எச்​சரிக்​கையை மத்​திய அரசுக்கு விடுக்​கிறோம்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள சர்வதேச சுகாதாரக் குழு: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in