‘கரூர் துயரத்தில் சிபிஐ விசாரணை மூலம் கடும் நடவடிக்கை எடுப்பதே உண்மையான அஞ்சலி’ - தினகரன்

‘கரூர் துயரத்தில் சிபிஐ விசாரணை மூலம் கடும் நடவடிக்கை எடுப்பதே உண்மையான அஞ்சலி’ - தினகரன்
Updated on: 
1 min read

சென்னை: ‘கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

“என் நெஞ்சில் குடியிருக்கும்..” என தனது பேச்சைத் தொடங்கும் தவெக தலைவர் விஜய், தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு தற்போது அப்பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம்?

உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமும், பணிப்பலன்களும் மட்டுமே தீர்வாக அமையாது என்பதோடு, தமிழக மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.' எனத் தெரிவித்துள்ளார்.

‘கரூர் துயரத்தில் சிபிஐ விசாரணை மூலம் கடும் நடவடிக்கை எடுப்பதே உண்மையான அஞ்சலி’ - தினகரன்
தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: தாராபுரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in