தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: தாராபுரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட நத்தப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட நத்தப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

Updated on: 
1 min read

தாராபுரம்: கடந்த தேர்​தலில் அளித்த வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாமல் மக்​களை ஏமாற்றி வரும் ஆளுங்​கட்​சிக்​கும், கட்சிமாறி துரோகம் இழைத்​தவர்​களுக்​கும் வரவிருக்​கும் தேர்​தலில் மக்​கள் தகுந்த பாடம் புகட்ட வேண்​டும் என்று தாராபுரத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசினார்.

திருப்​பூர் மாவட்​டம், தாராபுரம் (தனி) சட்​டப்​பேரவை தொகு​தி​யின் திமுக வேட்​பாள​ராக சுகன்யா போட்​டி​யிடு​கிறார். அவரை ஆதரித்து கட்​சி​யின் இளைஞரணி செய​லாரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி ஸ்டா​லின், நேற்று நத்​தம்​பாளை​யம் பகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசி​ய​தாவது: சட்​டப்​பேர​வை​யில் ஆளுங்​கட்சி எம்​எல்​ஏக்​கள் மக்​கள் பிரச்​சினையை பேசுவ​தில்​லை. திமுக எம்​எல்​ஏக்​கள் மக்​கள் சந்​திக்​கும் குடிநீர் தட்​டுப்​பாடு, சாலை வசதி, சாக்​கடை பிரச்​சினை மற்​றும் கட்​டமைப்பு தேவைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரு​கின்​றனர்.

ஆனால், ஆளுங்​கட்சி தரப்​பிலோ அல்​லது முதலமைச்​சரோ மக்​கள் பிரச்​சினை​களுக்​குப் பதில் அளிப்​ப​தில்​லை. சட்​டப்​பேரவை மக்​கள் பிரச்​சினை​களை விவா​திக்​கும் களமாக இல்​லாமல், முதலமைச்​சரைப் புகழ்ந்து பாடும் இடமாக​வும், சூப்​பர் சிங்​கர் நிகழ்ச்சி போல பாட்டு பாடும் மேடை​யாக​வும் மாறி​யுள்​ளது.

ஆட்​சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்​றுவோம் என்று கூறி அளிக்​கப்​பட்ட வாக்​குறு​தி​கள் எது​வும் இது​வரை நிறைவேற்​றப்​பட​வில்லை. மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை தரு​வ​தாகக் கூறி ஏமாற்​றி​விட்​டனர். ஆண்​டுக்கு 6 காஸ் சிலிண்​டர் இலவசம் என்று கூறி​விட்​டு, தற்​போது அடுத்த ஆண்​டு​தான் 3 சிலிண்​டர்​கள் தரு​வோம் என்​கின்​றனர்.

இளைஞர்​களுக்​கான மாதாந்​திர ஊக்​கத்​தொகை ரூ.4,500 மற்​றும் விவ​சாயக் கடன் தள்​ளு​படி போன்ற வாக்​குறு​தி​கள் அனைத்​தும் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்​ளன. தேர்​தலில் வெற்​றி​பெற்ற சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களைப் பெட்டி கொடுத்து விலைக்கு வாங்​கி, கட்சி மாறச் செய்து ஜனநாயகத்​தைக் கேலிக்​கூத்​தாக்​கி​யுள்​ளனர்.

இது​மட்​டுமின்​றி, மாநிலம் முழு​வதும் மின்​வெட்டு நில​வு​கிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளி​லேயே மின்​சா​ரம் இல்​லாத அவலநிலை தான் நீடிக்​கிறது. கடந்த தேர்​தலில் செய்த தவறை தாராபுரம் தொகுதி மக்​கள் மீண்​டும் செய்​து​விடக் கூடாது. கட்சி மாறிய துரோகி​களுக்கு மீண்​டும் வாய்ப்​பளிக்​கக் கூடாது. இவ்​வாறு உதயநிதி பேசி​னார்.

இக்​கூட்​டத்​தில் திரளான கட்​சித் தொண்​டர்​களும், பொது​மக்​களும் கலந்​து​கொண்​டனர். தொடர்ந்து மூலனூர், கொளத்​துப்​பாளை​யம், குண்​டடம் உள்​ளிட்ட பகு​தி​களிலும் நடந்த பிரச்​சாரக் கூட்​டங்​களி​ல் உதயநிதி வாக்கு சேகரித்து திறந்த வேனில் இருந்தபடி பேசி​னார்​.

<div class="paragraphs"><p>தாராபுரம் தொகுதிக்குட்பட்ட நத்தப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.</p></div>
எஸ்ஐஆர் குறித்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்: தேர்தல் ஆணையம் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in